வாக்கிற்கேற்ப இயற்றச் செய்யும் வாக்குப் பலிதம் ஆகியவைகளோடு நன்மாணாக்கரை உருவாக்கித்தருதல் போன்ற பல சிறப்புகளும் பெறுதற்கரிய தமிழ்ப்புலவர்கள் கூடியுள்ள மன்றத்தில் நிலைத்திருக்கும் என்பர் உலகினர் என்றவாறு. |
“மேல்இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர்; கீழ் இருந்தும் கீழ்அல்லர் கீழ் அல்லவர்”1 இது தம் மெய்யறிவால் மேல்கீழ் மாறுபடுத்தது. “இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டி, கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே பகைவர்க்குத்தி கோடு நுதி சிதைந்து கொல்துறைக் குற்றிலமாதோ”2 இது சொற் சாதுரியத்தால் மேல்கீழ் மாறுபடுத்தது. |
“கருதிய தெய்வம் கண்முன் தோன்றிப் பேசின் அல்லது பெருந்தகைப் புலமை எய்தாதுஎன்றிடல் இயல்பாம் அன்றே”3 “வண்ணப் பாநுவல் வாயின னேனும் சொற்படி நடவும் தொழில் இலனாயின் பல்இல்பாம்பு என்னப் பரதவிப் பானே” என இவர் புலவனின் வாக்குப் பலிதத்தையும் வற்புறுத்துகின்றாராதலின் இங்குத் ‘தெய்வமும் மொழிப்படி செய்யக் காண்டல் ’ என்கிறார். (354) |
78. | வெறிக்களம், நெற்களம், வேடர் சேரி, | | புலிக்குகை ஆதிய பொருள்எலாம் விரிக்கில் | | பெருக்கும்; ஆதலிற் பேசிலம் அன்றே. |
|
வேலனுக்கு வெறியாட்டயர்கின்ற இடம், நெற்களம், வேடர்களின் வாழிடம், புலிகள் வாழ்கின்ற குகைகள் முதலிய அனைத்தையும் எடுத்து விரிக்கப் புகுந்தால் இந்நூல் அளவற்று விரிந்துவிடும். எனவே அனைத்தையும் இந்நூலில் கூறவில்லை என்றவாறு. (355) |
79. | உழிஇயல்பு இவ்வாறு உரைத்தனம்; அடுத்துஇனி | | வேற்றுஉயிர் இயல்பினும் விளம்புதும் சிறிதே. |
|
|