அறுவகையிலக்கணம்235
பல்வேறு இடங்களைப்பற்றி இதுவரை இவ்வண்ணம் சொன்னாம். தொடர்ந்து மற்ற விலங்குகளின் இயற்கையையும் ஓரளவு கூறுவாம் என்றவாறு.
இந்நூற்பாவால் இப்பகுதி நிறைவுசெய்யப்பட்டு, அடுத்த வேற்றுயிர் இயல்பிற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்பட்டது.
(356)
உழி இயல்பு முற்றிற்று.
3. வேற்றுயிர் இயல்பி
பதினைந்து நூற்பாக்களானியன்ற இவ்வியல்பில் விலங்குகள், பறவைகள், நீர்வாழ்வன போன்றனவற்றின் தன்மைகள் கூறப்பட்டுள்ளன.
80.எண்கால் இருசிறைச் சிம்புள் என்றவை
 சிங்கத்து உறுதசை தின்பன வாமே.
எட்டுக் கால்களையும் இரண்டு சிறகுகளையும் பெற்றுள்ள சரபமானது சிங்கத்தைக் கொன்று அதன் ஊனை உண்ணும் இயல்பினது ஆகும் என்றவாறு.
சிம்புள் எனவும் சரபம் எனவும் கூறப்படும் இது பறக்கும் இயல்புடையது. “பறந்துசெல் சிம்புள் பைஎன வைத்தலும்”1 என்பது பெருங்கதை. இரணியனைக் கொன்ற நரமடங்கலைச் சிவபெரு மான் சரபமூர்த்தியாகி அடக்கினார். இவ் வடிவவர்ணனையைக் காஞ்சிப்புராணத்தில் காண்க.
(357)
81.கையொடும் இன்றியும் கவின்தரும் ஆளிகள்
 யானை ஊன்முழுது இனிதுஅருந் துபவே.
தும்பிக்கை உடைய இனம் ஒன்று அஃதில்லாத இனம் ஒன்று என இருவகை யாளிகள் உள்ளன. இவ் விருவகையும்