யானையின் மாமிசத்தை முற்றிலுமாக விரும்பிச் சாப்பிடுவன ஆம் என்றவாறு. |
ஆளி கண்டபேரண்டம் எனவும் கூறப்பெறும். (358) |
82. | வாலிய நிறம்முதல் ஐவகைத்து ஆகிய | | சீயம் தாய்வயிற்று உதைந்துவெண் பிறைக்கோட்டு | | ஆனைமேற் பிறக்கும்; அன்றுதொட்டு என்றும் | | அதன்தலை நிணமே அயில்வது ஆகுமே. |
|
வெண்மை, செம்மை, பச்சை, மஞ்சள், கருமை ஆகிய ஐந்து நிறங்களிலும் உள்ள சிங்கம் தான் பிறக்கும்போதே தன் தாயின் வயிற்றை உதைத்துக்கொண்டு வெண்மையான சந்திரனின் பிறைகளைப்போன்ற தந்தங்களைஉடைய யானையின் மேல் பாயும். அந்தநாள் முதல் என்றுமே சிங்கம் யானை மத்தகத்தில் உள்ள ஊனையே உண்டு வாழும் என்றவாறு. |
சிங்கத்தில் பல நிறங் கொண்டவை இருப்பன உண்மையே. இதில் கூறப்பட்டுள்ள பிற செய்திகளை இன்றைய விலங்கியல் அறிஞர் ஏற்பதில்லை. (359) |
83. | மலையிடைப் புணர்ந்த களிறுகை தூக்கின் | | அன்றிப் பிழையாது அணிநடைக் கரும்படி | | பன்னிரண்டு ஆண்டில் குருளைஒன்று ஈனும் | | என்றுமூது உலகும் இயம்பிடல் மிகையே. |
|
மலையினிடத்தில் தன்னோடு கலந்த ஆண்யானை கை தூக்கி விட்டாலன்றி உயிர்பிழைக்காத அழகிய நடையைஉடையகரிய பெண்யானை பன்னிரண்டு ஆண்டிற்கொரு முறையே கன்றுபோடும் என்று உலகினர் கூறும் சொற்கள் உயர்வுநவிற்சியே என்றவாறு. (306) |
84. | பால்நுகர் குருளையைப் படுத்துத் துயிலும் | | தாய்ப்புலி கரத்தால் தன்னை யறியாது | | அடித்துக் கோறும்என்று அகிலம்ஓ திடுமே. |
|