அறுவகையிலக்கணம்237
பால் குடித்துக்கொண்டிருக்கும் தன்னுடைய குட்டியையே தாய்ப்புலி தூங்கிக்கொண்டே முன்னங்கால்களால் தன்னையறியாமல் அடித்துக் கொன்றுவிடும் என்றுஉலகினர் சொல்வர் என்றவாறு.
(361)
85.ஆண்டு தோறும் மரைக்கொம்பு அடியோடு
 வீழ்ந்துமற்று அதுபோல் வேறுஉண் டாமே.
ஒவ்வொரு வருடமும் மானின் கொம்புகள் முற்றிலுமாகக் கீழேவிழுந்து பிறகு வேறு கொம்புகள் முளைக்கும் என்றவாறு,
(362)
86.வேலியுட் போதலும் வெட்டிய பள்ளத்து
 உறுபுனல் அருந்தலும் உதவா முயற்கே.
முயல்கள் வேலிகளுக்குள் புகுந்து அவற்றைத் தாண்டிச் செல்லா; அவை செயற்கையைாக வெட்டப்பட்ட பள்ளங்களில் உள்ள தண்ணீரைக் குடிக்கமாட்டா; (இயற்கையான நீர்நிலைகளில் மட்டுமேதான் அருந்தும்) என்றவாறு.
இந்தச் செய்தியின் முழு உண்மை தெரியக்கூடவில்லை.
(363)
87.ஆறு திங்களில் அடிதலை ஆதலும்,
 செத்துத் தேள்முதல் தீயவை தரலும்,
 குக்கற் குருளையில் குரைத்தலும் அரவினத்து
 உள்ளஎன்று உரைப்பார் உலகினில் உளரே.
பாம்பிற்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தலைப்புறமும் வால்புறமும் மாறிமாறி அமையும் என்றும், அது இறந்தால் அதன் உடலிலிருந்து தேள் முதலிய வேறு விஷ ஜந்துக்கள் பிறக்கும் எனவும், சில பாம்புகள் நாய்க் குட்டியைப்போலக் குரைக்கும் எனவும் கூறுகிற மக்களும் உள்ளனர் என்றவாறு
இந் நூற்பா ஆசிரியரின் சொந்தக் கருத்தாக அமையவில்லை. இது உண்மையான செய்தியா எனவும் உறுதியாக அறியக் கூடவில்லை.
(364)