பொருளிலக்கணம்238
88.புனல்பிரித்து ஆன்பால் புசிக்கும் தன்மை
 தாமரைக் கிழங்கால் தடந்தொறும் திரியும்
 அன்னம் கொள்வதுஎன்று அறைந்தனர் புலவோர்.
பசுவின் பாலில் கலந்துள்ள தண்ணீரை நீக்கிவிட்டுப் பாலை மட்டும் பருகுகின்ற இயல்பு தாமரைக் கிழங்குகளைக் கோதுவதற்காக நீர்நிலைகள் அனைத்திலும் சுற்றும் அன்னத்திற்கு உண்டு எனப் புலவர் கூறுவர் என்றவாறு.
கிழங்கால்-வேற்றுமை மயக்கம்.
(365)
89.கார்எதிர் நடம்இடு கலப மாமயில்
 கண்வழி இந்தியம் கசிதர அதன்பேடு
 அருந்திச் சினையாம் எனச்சிலர் அறைந்தனர்.
மேகத்தைக் கண்டு ஆடுகின்ற தோகையை உடைய அழகிய ஆண்மயிலின் விழிகளிலிருந்து அதன் விந்து வெளிப்படும் என்றும் பெட்டைமயில் அதனை உண்டுக் கருப்பமுறும் எனவும் சிலர் கூறுவர் என்றவாறு.
இந் நூற்பாவும் ஆசிரியரின் சொந்தக் கருத்தாகத் தோன்றாததோடு இதன் உண்மையையும் அறியக்கூடவில்லை.
(366)
90.குயில்தரும் சினையைக் காக்கைதன் குஞ்சொடு
 வளர்த்து விடும்என மாநிலம் சொலுமே.
குயில்கள் இட்ட முட்டையைக் காக்கைகள் அடைகாத்துக் குஞ்சுபொரித்துத் தம் குஞ்சுகளுடன் ஒரு சேர வளர்த்துவிடும் என்று உலகினர் சொல்வர் என்றவாறு.
இச்செய்தி பல இடங்களில் பேசப்படுகிறது. “உயிர்த்த பொழுதே நின்குரல்கே ளாமுன் ஓடிற்று ஈன்றதாய்; நயத்தின் வளர்த்த தாய் குரல்கேட்டலுமே நடுங்கத் துரந்ததால்”1 எனக் குயிற்பழிப்புரைப்பார் சிவப்பிரகாசர்.
(367)