91. | நாவுஇன்றி வாய்நிறை பல்லும், நாற்கண்ணும் | | கொண்டுள முதலைதன் இரையை மீதுஎறிந்து | | அருந்தும்என்று உரைப்பார் அளவரும் பலரே. |
|
நாக்கைத்தவிர மற்ற இடங்கள் எல்லாம் பற்களால் நிறைந்துள்ள வாயையும், முகத்துக்குவெளியே பிதுக்கிக்கொண்டுள்ள கண்களையும் உடைய முதலை தான்அருந்தும் உணவை மேலே வீசி கவ்விப்பிடித்து உண்ணும் என்று மிகப் பலர் கூறுவர் என்றவாறு. |
இக் கருத்தும் ஆசிரியரின் சொந்தக் கருத்தாகப் படாததுடன் இதன் உண்மையும் தெரியக்கூடவில்லை. |
92. | அணில்தொனி கேட்டலும் ஆமை சினையாய்க் | | கரையில்இட்டு உளங்கொடு காத்துஉரு ஆக்கும் | | என்றும் பற்பலர் இயம்புகின் றனரே. |
|
அணில் செய்கின்ற ஒலியினைக் கேட்டஉடனே ஆமை கருவுற்ற முட்டையை நீர்க்கரையில் இட்டு, அதனை இடை விடாமல் நினைப்பதினாலேயே அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும் எனவும் பலர் கூறுகின்றனர் என்றவாறு. |
இச் செய்தி ஆசிரியரின் சொந்தக் கருத்தாகக் கூறப்படவில்லை. இதன் உண்மையும் அறியக்கூடவில்லை. (369) |
93. | நண்டுதன் துணையை அழைத்துவந்து அணைதலும், | | சங்கு இனம் சேர்கையும், தனது பார்வையில் | | ஒருமீன் பற்பல ஒளிர்தரக் காட்டலும், | | வாடையில் தாழை மலர்தலும், பிறவும் | | உலகினிற் பழகி உணர்வது முறையே. |
|
நண்டுகள் உரிய பருவத்தில் தம் இணையைக் கூட்டிக் கொண்டு வந்து புணர்தல், சங்குகள் கூட்டங்கூட்டமாகச் சேர்ந்து வாழ்தல், தாய்மீன் தன் பார்வையாலேயே தான் இட்ட பல முட்டைகளை அடைகாத்துக் குஞ்சு பொரித்தல், குளிர்காலத்தில் தாழம்பூப் பூத்தல் ஆகிய பிறவற்றைஎல்லாம் |