ஒருவன் உலக நடை முறையில் பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்றவாறு. |
இவ்வியல்பில் சரபம் தொட்டு மீன் வரை இயங்குதிணை உயிர்களையே கூறிய இவ்வாசிரியர் இறுதியாகத் தாழை வாடையில் மலரும் என்ற நிலைத்திணை உயிர் ஒன்றைக் கூறினார். இதைக் கொண்டு எவ்வெப் பருவத்தில் எந்த எந்தத்தாவரங்கள் பயன்தரும் என்பதையும் உலகில் பழகி உணர்க எனக் குறிப்பாற் கூறினார். (370) |
94. | வேற்றுஉயிர் இயல்புஇவண் விளம்பினம்; இதன்பின் | | கருவி இயல்புஎனக் கழறுதும் சிறிதே. |
|
(மனிதன் அல்லாத) பிற உயிர் இனங்களின் தன்மைகளில் சிலவற்றை இவ்வாறு கூறி முடித்தாம். இதனை அடுத்துக் கருவி இயல்பு என்ற தலைப்பில் சிலவற்றைப் புகல்வாம் என்றவாறு. |
இந்நூற்பாவால் இவ்வியல்பு நிறைவு செய்யப்பட்டு அடுத்த இயல்பிற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்பட்டது. (371) |
வேற்றுயிரியல்பு முற்றிற்று. |
4. கருவி இயல்பு |
இவ்வியல்பில் போர், நிறுத்தல் ஆகியவற்றிற்குரிய கருவிகள் கூறப்படுவதோடு செருக்கு, உயிர்வாழ்க்கை ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் கருவிகளும், சான்றாண்மை, செங்கோன்மை, புலமை ஆகியனவற்றை அறியத் துணை செய்யும் கருவிகளும் இடம் பெற்றுள்ளன. இவ்வியல்பு பத்து நூற்பாக்களைக் கொண்டது. |
95. | வேலும், சூலமும், விளங்குவச் சிரமும், | | கறைபடும் உலக்கையும் ஆதிய கருவிகள் | | விட்டும் விடாதும் பொரும்இரு விதச்சமர்க்கு | | ஆவன என்றே அறைந்தனர் புலவோர், |
|