அறுவகையிலக்கணம்241
இலையைப் போன்ற கூரிய தலையை உடைய ஈட்டியும், மூன்று தலைகளைப் பெற்ற சூலமும், புகழ்பெற்ற வச்சிரப் படையும், பகைவரின் இரத்தக்கறை படிந்த உலக்கையும் போன்றன போர்க் கருவிகள் ஆகும். இவைதம் கைகளினின்றும் எறிந்து அல்லது எறியாமல் போரிடும் இருவகைப்போருக்கும் ஏற்றன என்று அறிஞர்கள் கூறினர் என்றவாறு.
போர்க்கருவிகள் இருவகைப்படும். முதல்வகை ஒரு வீரன் பகைவன் மேல் எறிந்து தாக்கும் படைகளாகும். இதனை வடமொழியில் அஸ்திரம் என்பர். பிறிதொருவகை வீரன் தன் கையிலேயே வைத்துக்கொண்டு போரிடற்குரிய படைகளாம். இது சஸ்திரம் எனப்படும். இந் நூற்பாவில் கூறப்பட்ட வேல் முதலியன இவ்வாறு விடுபடையாகவும், தொடுபடையாகவும் பயன்படும்.
நெல்முதலியவற்றைக் குத்தும் உலக்கையில் இருந்து பிரித்துக் காட்டக் கறைபடும் உலக்கை என்றார்.
(372)
96.ஆழியும் அம்பும் கல்லும் அனையவை
 விட்டுப் பொரும்ஒரு விதச்சமர்ப் பொருளே.
சக்கரம், கணை, கவண்கல் போன்றவை மாற்றார் மீது செலுத்திப் போரிடுவதற்காகும் அஸ்திரம் என்னும் விடுபடைகளாம் என்றவாறு.
(373)
97.வாளொடு வில்லும் வளைவுறு தோட்டியும்
 ஆதிய பிடித்தே அமர்செயற்கு ஆமே.
வாள், வில், வளைந்த அங்குசம் போன்றவை வீரர் தம் கைகளிற் பற்றியே போரிடுவதற்கான சஸ்திரம் என்னும் தொடுபடைகளாம் என்றவாறு.
வில்லும் அம்பும் ஒன்றாகச் சேர்ந்தால்தான் அது போர்க் கருவி ஆகும். இவர் அவ்விரண்டையும் தனித்தனியே தொடு, விடு படையாகக் கொண்டார். தனி வில்லோ அன்றித் தனி