அறுவகையிலக்கணம்245
5. தொகுப்புஇயல்பு
இவ்வியல்பில் சில புறப்பொருள்கள் தொகுத்து உரைக்கப்பட்டுள்ளன. நில உலகம், தமிழ்நாடு, இந்துசமயம் ஆகியவற்றிற்குப் புறம்பானவையும், ஓரிரு சமயக்கருத்துகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இவ்வியல்பு ஏழு நூற்பாக்களைக் கொண்டது.
105.கதிர்மதி, உடு, முகில் ஆதிய கவின்தரும்
 வானத்து உரைசெயும் வகைஎலாம் புறமே.
சூரியன், சந்திரன், விண்மீன்கள், மேகம் ஆகியவை விளங்குகின்ற ஆகாயத்தில் உள்ளதாகக் கூறப்படுவன யாவும் புறப்பொருள்களேயாகும் என்றவாறு.
ஆதிய என்றது மற்ற கோள்களையும், பிற மேல் உலகங்களையும் ஆம். இவ்வியல்பில் புறம் என்ற சொல் நமக்கு பருப்பொருளாகவோ அல்லது நுண்பொருளாகவோ-அப்பாற்பட்டது என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.
(382)
106.பாழியந் தடக்கைப் பகட்டுஇனம் பாம்பினம்
 அமர்தரும் அதலம் ஆதியும் புறமே.
(இந்நிலவுலகைத் தாங்கிக் கொண்டு இருப்பதாக நம்பப்படும்) வலியனவும் எழிலுடையனவும் பெரியனவும் ஆகிய துதிக்கைகளை உடைய (எண்டிசை) யானைகளும், நாகங்களும் வாழ்கின்ற அதலம் முதலிய கீழேழு உலகங்களும் புறமேயாம் என்றவாறு.
அதலம் ஆதிய என்றது அதல, விதல, சுதல, தராதல, ரசாதல, மகாதல, பாதலம் ஆகிய கீழேழ் உலகங்களை.
(383)
107.பிறமொழித் தேயமும் பிறங்கும் எண்டிசைப்
 பாலர்தம் ஊரும் பகர்புறப் பொருளே.