தமிழல்லாத வேற்றுமொழிகள் வழங்குகின்ற நாடுகளும், புகழ்மிக்க எட்டுத் திக்குப் பாலகர்களின் நகரங்களும் புறப் பொருளே என்றவாறு. |
எண்டிசைப் பாலர்தம் ஊர்களாவன: - கிழக்கு-இந்திரன்-அமராவதி; தென்கிழக்கு - அக்கினி-தேஜோவதி; தெற்கு இயமன்-சம்யமினீ; தென்மேற்கு-நிருதி-கிருஷ்ணவதீ; மேற்கு - வருணண் - ஸ்ரத்தாவதீ; வடமேற்கு - வாயு - கந்தவதீ; வடக்கு - குபேரன் - அளகாபுரி; வடகிழக்கு - ஈசானன் யசோவதி. (384) |
108. | அடுக்கிய அண்டமும் அசோகடி அரசடிக் | | கடவுள் ஆதியர் காக்கும் ஊரின் | | முத்தியும் கருதில் முழுப்புறம்பு ஆமே. |
|
ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் பற்பல உலகங்களும், அசோகமர நிழலில் உள்ள அருகக் கடவுளாலும் அரசமர நிழலில் உள்ள புத்தராலும் காக்கப்படுகின்ற உலகங்களில் சேர்தலாகிய அச் சமயங்கள் கூறும் சாலோக பதமுத்தியும் நன்கு ஆராயப்புகின் முற்றிலும் புறப் பொருளே ஆகும் என்றவாறு. |
இந்து சமயப்படி முத்தி நிலையும் பதமுத்தி, பரமுத்தி என இருவகைப்படும். கடவுளின் ஊரில் இருத்தல் (சாலோகம்) அவர் அருகே இருத்தல் (சாமீபம்), அவர் வடிவோடிருத்தல் (சாரூபம்) எனும் மூன்றும் பதமுத்திகளே. அதனை அடைந்தவர்களும் திரும்பப் பிறவி எடுக்கக் கூடும். இறைவனோடு இரண்டறக்கலத்தல் ஆகிய (சாயுச்சியம்) பரமுத்தி பெற்றவரே பிறவியறப் பெற்றவர். அருகர் புத்தர் ஊரின் முத்தி என்றது சாலோக பதமுத்தியே என இவர் கொண்டார். ஆனால் சமண, பௌத்த சமயிகள் வேறு வகையாகக் கூறுவர். (385) |
109. | காமியம் கருதிக் கவலும் நெஞ்சினர்க்கு | | உறுப்பு அலாதன ஒருங்கும் புறமே. |
|