முன் நூற்பாவில் காமியம் கொண்டு கவலைப்படுபவர்களுக்கு உடலைத் தவிர மற்ற அனைத்தும் புறம் என்றார். இங்கு அதற்கு நோ மாறுபட்ட நிலை கூறப்படுகிறது. பற்றறுத்தவர்களுக்கு (நிஷ்காமிகள்) உடம்பும் புறம் என்கிறது இச்சூத்திரம். (387) |
111. | புறப்பொருள் இவ்வணம் புகன்றனம்; இனிஅடுத்து | | அகப்புறப் பொருள்நிலை அறிந்த வாறு | | குறுக்கிக் கூறுதும் கொள்வார் பொருட்டே. |
|
புறப்பொருள்களைப் பற்றி இதுகாறும் கூறி முடித்தாம் தொடர்ந்து அகப்புறப் பொருள் நிலையை எமக்குத் தெரிந்த அளவு சுருக்கமாக விரும்பிக் கற்கின்றவர்களின் பயன்கருதிச் சொல்வாம் என்றவாறு. |
இந்நூற்பாவால் தொகுப்பியலாகிய இச்சிறுபகுதியும், புறப் பொருளாகிய பெரும்பகுதியும் நிறைவு செய்யப்பட்டு அடுத்த பகுதியாகிய அகப்புறப்பொருள் நிலைக்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்பட்டது. |
அகப்புறப்பொருள் நிலை ஆகிய அடுத்த பகுதியில் பெரும் பாலும் மெய்யறிவுக் கருத்துகளே (தத்துவம்) இடம் பெற்றுள்ளன. இளநிலை மாணக்கருக்கன்றி இவை ஓரளவு பக்குவம் பெற்றவர்க்கே நன்கு விளங்கும். அத்தகையோரே அடுத்த பகுதியைக் கற்க அதிகாரிகள் ஆவர். இதனை உணர்த்தவே “கொள்வார் பொருட்டே” என்றார். (388) |
தொகுப்பியல்பு முற்றிற்று. |
புறப்பொருள் முற்றிற்று. |