அறுவகையிலக்கணம்251
லையே பகுத்து நோக்கும் போது அதற்குள் ஐம்பூதக் கூறுகளும் இருப்பதால் அவை அகப்பொருளாகவும் ஆகின்றன. எனவே இவற்றை இவ்வாசிரியர் பொதுவான பொருள் என்ற அர்த்தத்தில் அகப்புறப்பொருள் என்றார்.
(389)
113.கதிர், மதி உடல்தொறும் கண்கள் ஆதலின்
 அவைகளும் அகப்புறப் பொருளாம் அன்றே.
ஞாயிறும் திங்களும் ஒவ்வொரு உடலிலும் கண்களாகப் பொலிதலால் அவையும் பொதுவானவையே என்றவாறு,
இரு சுடரையும் கண்களாகக் கொள்வதும் சமயநூற் கொள்கை. மேலே கூறிய அதே காரணத்தால் இவையும் அகப்புறப்பொருளாயின. ஞாயிறு மதிகளாக இருக்கும் இயல்பு வேறு; கண்களாக உள்ள நிலை வேறு என இவற்றின் இலக்கணங்களும் வேறுபட்டுள்ளன.
(390)
114.பொறியும் சத்தமும் புறத்தோடு அகத்தும்
 உள்ளன வாம்என்று உரைத்திடத் தகுமே,
செவி, உடம்பு, விழி, நா, மூக்கு எனும் அறிகருவிகளான ஐம்பொறிகளும் முறையே இவற்றிற்கு விஷயமாகிய ஓசை, ஊறு, உருவம், சுவை, நாற்றம் என்னும் ஐம்புலன்களும் உடலுக்கு வெளியேயிருப்பதோடு உள்ளும் இருப்பனவாகும் என்று சொல்லத்தகும் என்றவாறு,
ஞானேந்திரியங்கள் எனப்படும் அறிகருவிகள் புறத்தே உள்ள பொருள்களோடும் அகத்தே உள்ள மனத்தோடும் ஒரே சமயத்தில் தொடர்பு கொள்கின்றன, இவ்வாறே ஓசை முதலிய புலன்கள் புறத்தில் இருந்தாலும் அறிகருவிகளால் துய்க்கப்பட்டு அகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன, இக்காரணம்பற்றியே இவை பொதுப்பொருள் ஆயின.
இந்நூற்பாவில் சத்தம் என்றது ஐம்புலன்களுக்கும் உபலட்சணம், இங்கும் ஐம்பொறிகளும் துயில்நிலையில் சடமாகவும்