விழிப்பு நிலையில் செயல்படு பொருளாகவும் வேறுபட்டிருப்பதோடு மனத்துடன் இணைந்தால் மட்டுமே செயல்பட வல்லதாய்த் தன்னாண்மை அற்ற நிலைமையிலும் உள்ளன. இதனால் செவி, ஓசை முதலிய பொறி புலன்களுக்குக் கூறப்படும் இலக்கணம் பெரும்பாலும் தடத்தமாகவே அமைகின்றது. (391) |
115. | அறிவிடத்தும் இருந்தும் அணித்துஉரு ஆகியும் | | உணர்த்தும் குருநிலை உள்ளோ புறம்போ | | என்னும்மாண்பு உடையார் எமக்குஇனி யோரே. |
|
மாணாக்கரின் அறிவிற்குள் நுட்பமாக இருப்பதோடு அவர் அருகிலேயே தூல வடிவத்துடனும் விளங்கி உபதேசிக்கும் ஞானாசிரியருடைய நிலையை அகம் என்றோ புறம் என்றோ அறுதியிட்டுக் கூற முடியாது என்னும் தெளிவை உடையவர்கள் எம்மால் நேசிக்கத் தக்கவர்களாவர் என்றவாறு, |
அகம் என்றோ புறம் என்றோ கூற முடியாது எனலால் அகப்புறப் பொருள் என்பதாயிற்று, இறைவனே குருவடிவந்தாங்கி எழுந்தருளுகிறான் என்பது சமய நூற்றுணிபு, “அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமை”1 என்றார் வாதவூரரும், அக்குருநாதர் புறத்தே இருந்து உபதேசம் செய்வதோடு பக்குவம் பெற்ற சீடனின் அறிவுக்குள் நின்றும் உணர்த்துகிறார். எனவே குருநாதரின் நிலையும் அகம், புறம் ஆகிய இரண்டிற்கும் பொதுவாயிற்று. (392) |
116. | “அகப்புறச் சமயம் ஆறிரண் டிடத்தும் | | ஒருபொருள் உறும்என உணர்ந்தோர் உயர்ந்தோர்” | | என்னும் மெய்ம்மொழிக்கு இசையார் பதரே. |
|
“அகச்சமயங்கள் ஆறு, புறச்சமயங்கள் ஆறு என்று பிரித்துக் கூறப்படும் பன்னிரண்டு சமயங்களுக்கும் பொதுவாக |
|