ஓர் ஒப்பற்ற பரம்பொருள் திகழும் உண்மையை அநுபவவாயிலாக ஐயந்திரிபற உணர்ந்தவர்களே பெரியோர் ஆவர்” என்னும் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அனைவரும் பதர் போன்றவர்களே என்றவாறு. |
|
அகச்சமயம் ஆறாவன;- சௌரம், சைவம், சாக்தம் வைணவம், காணாபத்தியம், கௌமாரம் என்பன. |
புறச்சமயம் ஆறாவன; உலகாயதம், சௌத்திராந்திகம், யோகாசாரம், மாத்திமிகம், வைபாடிகம், ஆருகதம் என்பன, இவ்விருவகைப் பகுப்பையும் வேறுவகையாகக் கூறுவாரும் உளர். |
“சகல லோகங்களிலும் உள்ள சருவான்மாக்களுக்கும் பொதுவான தெய்வம் ஒன்று உண்டு” “ஓர் அரசனுக்குப் பல பத்தினிகள் இருப்பது போல் சகல சமயங்களும் தெய்வம் ஒன்றிற்கே உரியனவாகும்” “எல்லாச் சமயமும் தெய்வதரிசனம் பெற்றவர்களால் ஏற்படுத்தப் பட்டவைகளே”1 என்னும் இந்நூலாசிரியரின் கொள்கைகளோடு இணைத்துச் சிந்தித்தால் இந்நூற்பா தெற்றென விளங்கும். |
இவ்வாறு தெய்வமும் அகப்புறப் பொதுவாயிற்று, (393) |
117. | அகம்புறம் இரண்டும் அணைந்தும் அழிந்தும் | | அவற்றின் பொதுநிலை அவிர்தரும் அன்றே. |
|
அகப்பொருள் புறப்பொருள் ஆகிய இரண்டும் கூடுங்காலை அவற்றின் தனித்தன்மைகள் தம்முள் சேர்ந்தோ அல்லது அழிவுபட்டோ பொதுநிலை உண்டாகும் என்றவாறு, |
ஓர் உதாரணம் காண்போம். எழுத்து ஒலி வடிவம், வரிவடிவம் என்னும் இரண்டினை உடையது, இவற்றுள் முன்னது, அகமும் மற்றையது புறமும் ஆகும் என்பது தெளிவு, எழுதப்படும் போது இது இவ்விரண்டையும் பெற்று விளங்குகிறது. |
|