சமய பேதங்களுக்கு அப்பாற்பட்ட பரம்பொருள் அகப்புறப் பொருளாகக் கருதப்பட வேண்டிய ஒன்று என்பது கருத்து, (395) |
119. | அதுஇதுஎன்று அலைவார் ஆண்மை அகப்புறப் | | பொதுநிலைக் கனல்எதிர் பூளை போலுமே, |
|
நன்மை தீமை, உயர்வு, தாழ்வு, விருப்பு வெறுப்பு என்னும் இரட்டைகளில் (துவந்துவம்) சிக்கித் தவிப்பவர்களுடைய பெருமையனைத்தும் இரட்டையைக் கடந்த பொதுநிலை என்னும் நெருப்புக்கு எதிரே பூளைப்பூப்போல் சாம்பலாகி விடும் என்றவாறு, |
“நன்மை தீமை இதம் அகிதம் நட்பு விடுதி தனதுபுறம் புன்மை மேன்மை இவையேயாய்ப் பூமி சுவர்க்க நிரயங்கள் பன்மை யோனி அனைத்தினும்க யிறும்பம் பரம்போல் எனையாட்டி இன்மை ஆனாய் உறவு அமையும் இறை ஆட் கொண்டான் காமியமே”1 என்பதனால் காமியத்தால் துவந்துவம் தோன்றுவதும் தெய்வ அருளால் அது அழிவதும் பெறப்பட்டது. |
உயிர்களை உய்விக்கும் தெய்வ அருள் பொதுவாகும் என்பது கருத்து. (396) |
120. | உலவாப் பெருநலம் உள்ளொடு புறம்பும் | | உணர்வார்க்கு என்பவர் உலகினில் சிலரே. |
|
என்றுமே குறையாத பேரின்பமான முத்திநிலையும் அறியும் தன்மை உடையவர்களுக்கு அகப்புறப்பொதுப் பொருளே என்று துணிபவர்கள் இவ்வுலகில் மிகச்சிலரே ஆவர் என்றவாறு, |
முத்தி ஒன்றுதான் சிறப்பு எனப்பட்டது. அது சீவன்முத்தி தேகமுத்தி என இருவகையாய் உரைக்கப்படும்., மலங்களினின்று நீங்கி உடலோடு வாழ்தல் சீவன்முத்தி. உடல் வீழ்ந்தபின் |
|