யாப்பிலக்கணம்262
இதனையே இவ்வாறு கூறாமல் ஈரசை மூன்றசைச் சீர்கள் நான்கு வந்தன என்னில்,
முதல் அடி: கூவிளம் கூவிளம் கருவிளம் தேமா,
இரண்டாம் அடி: கருவிளம் கூவிளம் தேமா கூவிளம் என ஆகும்,
இவற்றால் பேதமின்மையின் அயல் அல என்றார். ஆனால் பிறர்கூறும் இலக்கணத்திற்குப் பொருந்த அமையும் நூற்பதா ஓசையில்லாமல் போகலாம், அதற்கு எடுத்துக் காட்டாகத் தான் இந்நூற்பாவின் நான்காம் அடி இயற்றப்பட்டுள்ளது. அவ்வடியை நான்காகப் பகுத்தால் கருவிளங்காய், புளிமா, புளிமாங்காய், புளிமா ஆகும். ஈரசை மூன்றசை கலந்து நன்னான்கா வந்தும் இவ்வடி சூத்திரத்திற்குரிய அகவல் ஓசையைத் தரவில்லை. (இவ்வோசை வராத காரணம் ஆசிரியப்பாப் பற்றிய அடுத்த நூற்பாவில் விளக்கப்படும். இவ் வோசைமாற்றம் ஏற்படாமல் இருப்பதற்காக ஓர் அடியை இரண்டாகப் பிரித்துக் கூறுவதே நல்லமுறை என இவ்வாசிரியர் கருதுகிறார்.
(403)
நேரிசை ஆசிரியப்பா
5.நூற்பா என்ன நுவல்கையில் தோன்றி
 இரண்டாப் பிரிக்கில் சீர்நலம் என்னும்
 வாய்பாடு உறும்ஐந்து அசைச்சொலின் இன்றியும்
 நான்காப் பிரிக்கிற் காய்கனி இன்றியும்
 மோனை வராதும் அடிஒன்று ஆகி
 ஈரடிக்கு ஒவ்வோர் எதுகைத்து ஆகி
 இரட்டிய தொகையடி ஆகி முடிவது
 நேரிசை யகவற் பாஎனல் நெறியே,
சொல்லுங்கால் சூத்திரப்பாவேபோல் காணப்பட்டு, ஓர் அயை இரண்டாகப்பிரித்தால் ஐந்து அசைச்சீராக வராமலும், நான்காகப் பிரித்தால் மூவசைச்சீராக வராமலும், நடுமோனை தவறாமல் வந்தது ஓர்அடி ஆகி இத்தகைய அடிகள் இரண்டிரண்டு அடிகளுக்கு ஓர் எதுகை பெற்று இரட்டைப்