யாப்பிலக்கணம்266
எதுகை இல்லாததும், ஒற்றைப்படை அடிகளை உடையதும் முன்பே காட்டப்பட்டன. ஓர் அடிக்குள் மோனைவராமல் அடிஎதுகை வந்த ஆசிரியப்பா:-
வசையில் காட்சி இசைநனி விளங்க
முன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகத்து
வேறுவேறு பெயரின் ஊறின் றியன்ற
மையறு சிறப்பிற் றெய்வத் தன்மைப்
புகலி நாயக! இகல்விடைப் பாக!
அமைநாண் மென்றோள் உமையாள் கொழுந!1
(406)
8.அகவலில் சூத்திரச் சீர்வந்து ஒன்றினும்
 சொற்சுவை உளதுஎனில் தூயோர் தள்ளார்;
 ஆயினும் இனிதுஎன்று அறைவது கடையே.
ஆசிரியப்பாவில் சூத்திரத்திற் குரிய சீர்கள் இடம்பெற்றிருந்தாலும் சொல்லினிமை இருந்தால் மோலோர்கள் அதைப் புறக்கணிக்க மாட்டார்கள், என்றாலும் அதைச் சரியான யாப்பமைதியையுடைய பா எனக் கூறுதல் தக்கதன்று என்றவாறு.
சூத்திரப்பாவில் ஒவ்வோரிடத்தே இரண்டாகப் பிரித்தால் ஐந்ததைச்சீர் வரும், ஆனால் ஆசிரியப்பாவில் அது வரக்கூடாது. இவ்வியல்பின் நான்காம் நூற்பாவின் நான்காம் அடியில் கருவிளந்தண்பூச்சீர் ஆகிய ஐந்ததைச்சீர் இடம்பெற்று ஓசை குன்றியது முன்பே காட்டப்பட்டது. ஏதோ மிகச் சிற்சில இடங்களில் பயின்றுவந்தால் பயன்நோக்கி ஏற்றுக்கொள்ளலாமெனினும் அஃதில்லாமையே சிறப்பு என்கிறார்.
(407)
9.நூற்பா என்பது சூத்திரப் பாவே;
 ஆசிரி யப்பா என்பது அகவலே,
பொருள் வெளிப்படை,
(408)