யாப்பிலக்கணம்268
இங்கு இவர் அவகலிலக்கணத்தில் கூறியவாறு வழியெதுகை வந்தமை காண்க,
(409)
11.தனிச்சீர் ஆதிய தணவினும் வஞ்சிப்
 பாஎனும் மாற்றம் பழுதுப டாதே.,
தனிச்சொல் பெறுதல் முதலிய விதிகளிலிருந்து வேறுபட்டாலும் வஞ்சிப்பா என்ற பெயரால் வழங்குவதற்குத் தடையில்லை என்றவாறு,
“ஈண்டு (வஞ்சிப்பாவில்) தனிச்சொல் வேண்டும் என்று பிற்காலத்து நூல் செய்தாரும் உளர். அது சான்றோர் செய்யுள் எல்லாவற்றோடும் பொருந்தாமையானும் பிற்காலத்தில் செய்த நூல்பற்றி முற்காலத்தில் செய்யுட்கெல்லாம் இலக்கணம் சேர்த்துதல் பயமின்றாதலானும் அஃதமையாதென்பது”1
ஆதிய என்றதனானே அகவலடிகள் இரண்டினை மட்டுமே பெற்று வரவேண்டும் என்று முன் நூற்பாவில் விதிக்கப்பட்டதற்கும் விலக்கு அளித்தவாறாயிற்று, இதற்கு உதாரணம்:-
யாமெமதெனும் தாமதர்தமை
நாளுந்துதித் தாளுங்குரு
எனவேபணிந் தனமேலிவர்
விதிமதன்சமன் சதிதவிர்தவர்
போல்மகிழ்பவர் பால்மருவிலன்;அதனால்
வெள்ளிய வரைபோல் விளங்குருக் காட்டித்
தெள்ளிய மறையின் சிரப்பொரு ளுணர்த்தி
கோதறு தொண்டர் குழுவினில் கூட்டி
ஆதர வுடனுற் றருள வேண்டும்;