குஞ்சரம் பிளிறக் குரக்கினம் புயலென்று |
அஞ்சல் உறீஇ அலமரும் பொழில்சூழ் |
குன்றக் குடியுல் குலவுசில் பரனே.1 |
இதில் தனிச்சொல்லை அடுத்து ஏழு ஆசிரிய அடிகள் வந்தன. தனிச்சொல் பெறாத வஞ்சிப்பா வந்துழிக் காண்க, (410) |
12. | அகவற் பாசுரத் தடியினும் வஞ்சிப் | | பாவடி குறைதலிற் குறளடி எனும்மொழி | | கூட்டிச் சிற்சிலர் கூறலும் உளவே., |
|
ஆசிரிய அடிகளைவிட வஞ்சியடிகள் நீளத்திற் குறைந்ததிருப்பதால் இப்பாவிற்குச் சிலர் குறளடி எனச் சேர்த்துக் குறளடி வஞ்சிப்பா என வழங்குவர் என்றவாறு. |
தமிழ்யாப்பியலார் இரண்டு மூன்று, நான்கு, ஐந்து ஐந்தின் மிக்க சீர்களாளியன்ற அடியை முறையே குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என்பர், இவர் இதனைக் கொள்ளவில்லை, இந்தவகை வஞ்சிப்பாவின் வஞ்சியடிகளில் மூவசைச்சீர்கள் இரண்டுவந்தமையாலேயே இதுகுறளடி வஞ்சிப் பாவாயிற்று. முச்சீர்கள் வந்த சிந்தடி வஞ்சிப்பாவும் தமிழில் வழங்குகின்றன. “சிந்தும் குறளும் அடி என்பர் வஞ்சிக்குச் சீர்தனிச் சொல் அந்தம் சுரிதகம் ஆசிரியத் தான்மருவும்”2 என்பதால் இதனை அறியலாம், |
எனவே குறளடி வஞ்சிப்பா என்பதற்கு இவர் கூறும் பெயர்க்காரணம் மேலும் ஆய்விற்குரியது. (411) |
வெண்பா |
13. | ஈற்றில் நேர்வரும் மூன்றசைச் சொற்களும் | | ஈரசை ஓரசை யாவும் வெண்பாக்கு | | உரியன ஆம்என்று உரைத்தனர் உணர்ந்தோர், |
|
|