அறுவகையிலக்கணம்271
இதனுள் காய்முன் நேராகிய வெண்சீர் வெண்டளையும், விளம்முன் நேர், மாமுன் நிரை எனும் இயற்சீர் வெண்டளையும் கூறப்பட்டன.
(414)
16.நாள்என மலர்என முடித்தவெண் பாக்கள்
 உத்தமப் பகுதி என்பதும், காசுஎனப்
 பிறப்புஎன முடிப்பன ஏனை என்றும்
 உணரும் பாவலன் நூற்றுள் ஒருவனே,
நாள், மலர், என்ற ஓரசை வாய்பாட்டான் முடிந்த வெண்பாக்கள் சிறப்புடையன என்றும், காசு, பிறப்பு என்று குற்றியலுகரம் பெற்று வருவன அத்துணைச் சிறப்புடையன அன்று எனவும் நுட்பமாக ஓர்ந்து அறியும் புலவர்கள் மிகச் சிலரே என்றவாறு,
இவர் வெண்பாவின் ஈற்றடி சிறப்பான ஓசைநயத்தோடு அமைய வேண்டும் என வற்புறுத்துகிறார், “அதன் ஈற்றடி மோனை எழிலிசை இவற்றால் தண்ணுமை போலத் தயங்கும் அன்றே”1 எனப் பின்னால் கூறுகிறார். அதற்கு ஓரசையால் இறும் வெண்பாவே சிறந்தது ஆகும் என்ற தம் கருத்து இங்குக் கூறப்பட்டது.
(415)
குறள் வெண்பா
17.உரியசொல் நான்கால் ஓரடி அமைத்துஅவ்
 வெதுகையில் வேறுஅடி முச்சொலில் காட்டி
 மூன்றாம் சொல்தொறும் மோனையொடு முடிக்கில்
 குறள்வெண் பாவெனக் கூறினர் உயர்ந்தோர்.
வெண்பாவிற் குரிய ஈரசைச் சீர்களும் காய்ச் சீர்களும் (வெண்டளை பிழையாது) நான்கு சேர்ந்து ஓரடியாக அமைந்து, முதலடியோடு எதுகைபெற்ற இதேபோன்ற மற்றோரடி