யாப்பிலக்கணம்274
ஒருவிகற்பம்:-
அரிய சமயங்கள் அத்தனையும் போற்றும்
பெரிய குருபரனைப் பேசுங்கால் யாரும்
தெரிய மலைதோறும் சென்றுதினம் ஆடற்கு
உரியவனாம் சென்னைநக ரோன்,1
இருவிகற்பம்:-
இவ்வுலகத் தின்பம்உவர்த் தெஞ்ஞான்றும் பூமகள் கோன்
அவ்வுலகத் தின்ப மதுவே விருப்புற்றார்
முந்நீர் வளாக முழுதுறிலும் வாய்க்கொள்ளார்
உய்ந்நீர வல்லா வுரை.2
பலவிகற்பம்:-
கண்ணனருள் பெற்றார்நற் கல்வியே செல்வமெனக்
கொல்லா விரதங் குறிக்கொள்ப வேறுசிலர்
தீக்கொலையிற் செய்பொருளே செல்வமென நின்றன ரால்
என்னே வுலகியற்கை யென்.3
(419)
பஃறொடை வெண்பா
21.நேரிசை வெண்பா வேணமட் டடுக்கி
 இடைதொறுந் தனிச்சொல் இசைவுறப் பொருத்தல்
 பஃறொடை வெண்பா ஆகும்; இதனைக்
 கலிவெண் பாவெனக் கழறுநர் உளரே,
நேரிசை வெண்பாக்களைத் தங்கள் உளங்கொள்ளுமளவும் அடுக்கிக் கொண்டே போய் இருவெண்பாக்களின் இடைகளில் எல்லாம் எதுகையும் தளையும் பொருந்துமாறு தனிச்சொற்களைப் பெய்வதால் உண்டாகும் பா பஃறொடை வெண்பா ஆகும். சிலர் இதனைக் கலிவெண்பா என்றும் கூறுவர் என்றவாறு.