யாப்பிலக்கணம்276
“முகட்டளை, கலம்பகம், சமநடை, சமவியம், மட்டவிழ் குழபலினாய் மயூர சமவியம் ஒட்டினார் எழுத்தினால் ஒட்டி ஒண்டமிழ்க்கு இட்டமாய் அவர்கள் வெண்பாவின் பேர்களே”1 என்பது அந்நூற்பா.
இவ்வாறு பலவகையாகப் பிரித்துக் கூறப்பட்டாலும் அவை அனைத்தையும் ஒரோ வகையால் இவ்வைந்தினுள் அடக்கி விடலாம் என்பது இவர் கருத்து.
இவர் எதுகையை யாப்பின் இன்றியமையாத அங்கமாகவே கொள்வதால் பல விகற்ப வெண்பாக்களைச் சிறந்தனவாக ஏற்றுக் கொள்வதில்லை, இவரால் இயற்றப்பெற்ற இன்னிசை வெண்பாக்கள் அனைத்துமே - இவ்வுரையாசிரியனின் அறிவுக் கெட்டியவரையில் - ஒரு விகற்பத்தான் இயன்றனவே, எதுகை, மோனை இரண்டுமே உரிய இடத்தில் நன்கு அமைந்தது தான் யாப்பின் சரியான வடிவம் என்பது இவர் கொள்கை. இஃது அடுத்த நூற்பாவில் கூறப்படும்.
(421)
23.தளைப்பிழை இன்றிப் பொருளொடு திகழுறும்
 வெண்பா மோனையும் எதுகையும் பிறழினும்
 தவிரினும் ஒப்புவர் தக்கோர்; ஆயினும்
 மதுரம் குன்றிடும் என்பது வழக்கே.
வெண்டளை பிழையாமல் நல்ல பொருளமைதி வாய்ந்த வெண்பா எதுகை, மோனை ஆகிய இரு தொடை நயங்களும் பெற்று வராதிருப்பினும் பெரியவர்கள் அவற்றைத் தழுவி ஏற்றுக் கொள்வர். என்றாலும் அவை இனிமையில் குறைபாடுடையன என்பதே மரபாம் என்றவாறு,
(422)
24.குறில்தனி வரும்அசை சீர்ஈற்று அன்றி
 வாரா இயற்கையும், குற்றிய லிகரம்
 கொள்ளலும் தள்ளலும் ஆதிய பிறவும்
 அறிவார் யாம்பகர் அடுக்கு முறைகொடு