யாப்பிலக்கணம்278
குற்றிகரம் அலகிடப்படின் காய்முன் நிரை வந்து வெண்டளை பிழைத்தலின் அங்கு அலகு பெறாது, ஆனால், “வந்துநீ சேரின் உயிர்வாழும் வாராக்கால் முந்தியாய் பெய்த வளை கழலும்- முந்தியாங்கோளானே கண்டனங்கோள் குறியாய் இன்னுமோர் நாளானே நாம்புணரு மாறு”1 என்னும் வெண்பாவில் “முந்தியாய்” என்ற சீர் குற்றியலிகரம் அலகுபெற்றுக் கூவிளம் என நின்றது, அங்ஙனம் கொள்ளாவிடின் மாமுன் நேர்வந்து வெண்டளை பிறழும். இதனால் குற்றியலிகரத்தை இடம் நோக்கி அலகிட வேண்டும் என்றாயிற்று, இக்கொள்கை குற்றியலுகரத்திற்கும் பொருந்தும்.
இனி ஆதிய பிற என்றது முன் சார்பியல்பில், “செய்கை தர்மம் கல்வி தன்மை பொன்வில் எனுமிவை போன்றநேர் நேரும் நிற்கும் இடத்தால் நிரையெனப் படுமே”2 என்ற கருத்தை.
வெண்பாவில் பிறதளை விரவாததோடு சிறந்த செப்பலோசை, சொற்கட்டு, செறிவு, எதுகை மோனை ஆகிய தொடை நயம் அனைத்தும் இன்றியமையாது வேண்டப்படுதலின், “வெண்பா இயற்கை விரித்திடற்கு அரிது” என்றார்.
மிருதங்கம் தனி ஆவர்த்தனம் வாசித்து முடிக்கும்போது எப்படி ஒரு தீர்மானத்தோடு சம்பீரமாக முடிக்கப்படுமோ அவ்வாறு வெண்பாவும் முடிக்கப்பட வேண்டும் என உவமை கூறி விளக்குகிறார்.
(423)
வெண்டளைக் கலிப்பா
25.இன்னிசை வெண்பா ஈற்றடியும் நாற்சீர்
 ஆகித் தளையும்அம் முறையே நிற்பது
 கலிப்பா ஆம்எனக் கழறினர் கற்றோர்.