அறுவகையிலக்கணம்279
இன்னிசை வெண்பாவின் இறுதி யடியும் முதன்மூன்று அடிகளைப் போலவே நாற்சீர் பெற்று வெண்டளை பயின்று (நாள் மலர் காசு பிறப்பு என்ற இறுதிச் சீரின்றி இயல்பான ஈரசை மூவசைச் சீர்களால் முடிந்து) கலிப்பா ஆகும் என்பர் புலவோர் என்றவாறு.
அம்முறையே நிற்பது என்றதனால் ஓரசை, குற்றுகர அசைகள் நீக்கப்பட்டன. வெண்டளையற்ற கொச்சகத்தினின்று வேறுபிரித்தறிவதற்காகத் தலைப்பில் வெண்டளைக் கலிப்பா என்று சுட்டப்பட்டது.
(424)
26.நேர்எனத் தொடுத்தலும் ஏஎன முடித்தலும்
 கலிப்பாக்கு அணிஆம்: நிரைஎன எடுத்தலும்
 ஆல்ஓ கொல்எனல் ஆதியில் முடித்தலும்
 ஏனைஎன்று இயம்பினர் எண்ணில்பல் புலவோர்.
நேரசையில் தொடங்கி ஏஎன முற்றுவிப்பது வெண்டளைக் கலிப்பாவிற்குச் சிறப்பாம்., நிரையசையில் ஆரம்பித்தலும் ஆல், ஓ, கொல் முதலியனவற்றால் நிறைவு செய்வதும் அத்துணைச் சிறப்பினது அன்று, இது பற்பல அறிஞர்களின் கருத்தாகும் என்றவாறு.
வெண்டளைக் கலிப்பாவிற்கு உதாரணம் வருமாறு:-
 பொற்றுயரால் நெஞ்சம் புலர்கின்ற புன்மைமுழுது
 அற்றுலக மின்புறச்சித் தாடும்நா ளின்றேயோ?
 மற்றுவகை இல்லா மணியே மறைமுதனூல்
 கற்றுணர்ந்தார் போற்றும் கதிரா யிரத்தானே.1
(425)
கொச்சகக் கலிப்பா
27.தளைபிறழ்ந் துள்ள கலிப்பாத் தானே
 கொச்சகக் கலிப்பா என்றும், சிலரால்
 கொச்சகம் என்றும் கூறப் படுமே,