யாப்பிலக்கணம்280
வெண்சீர் வெண்டளை பெற்றுவராத கலிப்பாவே கொச்சகக் கலிப்பா எனச் சிலராலும், கொச்சகம் எனச் சிலராலும் கூறப்படும் என்றவாறு.
இந்நூற்பா வெண்டளை பிறழ்ந்த கலிப்பா என்று மட்டுமே கூறினாலும் கொச்சகக் கலிப்பாவில் காய்ச்சீர்கள் மிகுதியாகவும், ஈரசைச் சீர்கள் அருகியும் வரவேண்டும், இதற்காகவே தளைபிறழ்ந்த என்பதற்கு ‘வெண்சீர் வெண்டளை பெற்று வராத’ எனப் பொருள் கூறப்பட்டது. இவர் தளைகளுக்குப் பெயரும் இலக்கணமும் தனியே கூறிற்றிலர் என்பது முன்பே கூறப்பட்டது.
கொச்சகக் கலிப்பாவிற்கு எடுத்துக் காட்டு வருமாறு;-
மஞ்சாரும் நெடுங்கோல வரையேபோல் வாரிதிமேல்
நஞ்சார்வாய்ப் பாம்பணையின் நடுக்கிடக்கும் நாரணனே !
ஒஞ்சாத மாதவப்பேர் உரத்தினர்க்கும் ஒருசிறிதும்
அஞ்சாவெங் கலிப்பேயை யடக்கும்வலி அருள்வாயே,
(426)
மருட்பா
28.நேரிகை வெண்பா தனிச்சொல் வரைகொடுஅவ்
 வெதுகைவிட் டேனும்மூன்று அகவல் அடிஇசைத்து
 அவற்றின் நடுஅடி ஈற்றில் ஈரசை
 குறைக்கில் மருட்பா என்றுகொள் வாரே.
நேரிசை வெண்பாவின் முதல் இரு அடிகளை முழுவதும் பெற்று, அதற்குப் பின் இதே எதுகைபெற்றோ அல்லது வேறு எதுகை பெற்றோ மூன்று அகவலடிகள் வந்து, அவற்றின் இரண்டாமடி ஈற்றுச்சீர் குறைந்தால் அந்தப்பா மருட்பா எனப்படும் என்றவாறு,
நேரிசை வெண்பாவின் முற்பாதி, மூன்றடியுள்ள நிலை மண்டில் அகவலோடு இணைந்தால் (பிறர் கூறும் நேரிசையா