அறுவகையிலக்கணம்281
சிரியப்பா) மருட்பா ஆகும் எனப்பட்டது. இவர் இரு வெள்ளடிகளும் மூன்று அகவலடிகளும் இணைந்ததே என உறுதியாக வரையறை செய்து கொள்கிறார். இவரால் இயற்றப்பெற்ற மருட்பாக்கள் அனைத்தும் இத்தன்மையனவே. ஆனால் பிற நூல்களின் கொள்கை வேறு,
அவை மருட்பாவிற்கு அடி வரையறை செய்யவில்லை. ஆனால் பொருள் வரையறைசெய்கின்றன. புறநிலை வாழ்த்து, கைக்கிளை, வாயுறை வாழ்த்து. செவியறிஉறூஉ என்னும் நான்கு பொருள்களே மருட்பாவிற் குரிய துறைகளாம். வெண்பா முதலிலும் அகவல் பின்னாகவும் வரவேண்டும், அவ்வளவே, “பண்பார் புறநிலைபாங்குடைக் கைக்கிளைவாயுறை வாழ்து ஒண்பாச் செவியறிவு என்றிப் பொருள்மிசை ஊனமில்லா வெண்பா முதல்வந்து அகவல் பின்னாக விளையும் என்றால் வண்பால் மொழிமட வாய்மருட் பாவெனும் வையகமே”1 என்பது காரிகை, இம்மருட்பா சமனிலை, வியனிலை என இரண்டாகப் பகுக்கப்படும், இருவகைப் பாவடிகளில் சம எண்ணிக்கையில் அமைந்தது சமநிலை மருட்பா ஆகும், ஏற்றத் தாழ்வுடையது வியனிலையாம்., இத்தகைய பொருள், அடிப்பாகுபாடுகளை இவர் வேண்டவில்லை.
இவர் கூறும் மருட்பாவிற்கு உதாரணம் வருமாறு:-
வானமங்கை அல்லளிவள் வார்குழற்பூ வாடுகின்ற;
தேனனைய மைக்கண் சிமிட்டுகின்ற;- ஞான
குருவெனப் பழனிக் குவட்டில் மேய
ஒருவனை யேதினம் உன்னும்
முருடர்தங் குலத்து முகிழ்முலை மகளே.2
நூற்பா முதல் மருட்பா முடிய இதுவரை கூறப்பட்ட யாப்பு வகைகள் யாவும் இவ்வாசிரியர் கருத்துப்படி இயற்றமிழ் ஆகும். இனி இங்கிருந்து இசைத் தமிழ்க்குரிய பாவகைகளைக் கூற முற்படுகிறார்.
(427)