கந்தரிட மாமிதனைக் கைபிடித்தார் ஆமாயின் |
இந்த வுலகதனுக் கேற்குமோ அம்மானை? |
ஏற்குமென்றே கையில்மழு ஏந்தினர்காண்அம்மானை,1 |
இதில் முதல் இருவரிகள் முதல் பெண் கூறும் செய்தி. அடுத்த இருவரிகள் இரண்டாமவள் எழுப்பும் ஐயம், ஐந்தாம் வரி மூன்றாமவள் இறுக்கும் விடை, மிகப் பெரும்பாலான அம்மானைகள் இவ்வாறே உள்ளன. (428) |
30. | அம்மானை ஈற்றின் விடைமொழி யதனுள் | | இருபொருள் காட்டிடல் மிகையாம்; முப்பொருள் | | நாற்பொருள் மொழியினும் இசைவுறில் நலமே, |
|
அம்மானைப் பாட்டில் மூன்றாமவளின் பதிலாக அமைந்துள்ள கடைசிப் பகுதியில் பெரும்பாலும் இருபொருள் அமையும்படி சொல்லாட்சி இருக்கும். அங்கு மூன்று அல்லது நான்கு பொருள்களை அமைத்தாலும் (மிக்க வலிதிற் பொருள் கோடலின்றி) இயல்பாகப் பொருந்தினால் அதுவும் சிறப்புடையதே ஆகும் என்றவாறு, |
மாயன் புகழ மலைப்பழனி வாழமுருகோன் |
தூயன் குரவன் தொழுகடவுள் அம்மானை; |
தூயன் குரவன் தொழுகடவுள் ஆமாகில் |
வேயன்ன தோளாரை வேட்பானேன் அம்மானை? |
வேட்டவிதம் எண்ணில் வினயங்காண் அம்மானை.2 |
இதில் ஈற்றிலுள்ள வினயம் என்ற சொல் வில்நயம் என இருசொல்லாகவும், வினயம் என ஒரு சொல்லாகவும் இரு பொருள் படும் பிரிமொழிச் சிலேடை ஆகும். வில்நயம் வீரத்தையம், வினயம் காதலையும் குறித்தது. சூரனை வென்ற வீரத்திற்குப் பரிசாகத் தெய்வயானையையும், தன் காதலால் |
|