கொச்சகக் கலிப்பாவைப் போலப் பாடப்படுகின்ற அம்மானை இழிந்ததாம் எனத் திண்ணமாய்க் கூறலாம் என்றவாறு. |
|
கொச்சகச் சீர் என்றது கலித்தளையால் வருவதனை, அம்மானை எப்போதும் வெண்டளையாலேயே வரவேண்டும். கலி வந்தால் இழிவு என்கிறார். (431) |
கட்டளைக் கலித்துறை |
33. | ஈரசை மூன்றசைச் சொற்கள்மிக்கு அணைந்தும் | | ஒவ்வோர் ஈற்றில் தேமாந் தண்பூப் | | புளிமாந் தண்பூப் புணர்ந்தும் ஐஞ்சீர் | | ஆவதோர் அடியாய், நாலடி உடைத்தாய் | | ஈற்றில் ஏஎன முடிவது கட்டளைக் | | கலித்துறை யாம்எனக் கழறுதல் முறையே. |
|
ஈரசை மூவசைச் சீர்களை மிகுதியாகப் பெற்று ஈற்றுச் சீர் சில இடங்களில் மட்டும் தேமாந்தண்பூ அல்லது புளிமாந்தண்பூ என்ற நான்கசைச் சீராக வரும் ஐஞ்சீரடிகள் நான்கு ஏ என முடிந்தால் அது கட்டளைக் கலித்துறை எனப்படும் என்றவாறு, |
கட்டளைக் கலித்துறை வெண்டளையால் அமைய வேண்டும் என்பது அதிகாரத்தாற் பெற்றதாம், இப்பாவின் எழுத்து வரையறை அடுத்த நூற்பாவில் கூறப்படும். |
பெரும்பாலான கட்டளைக் கலித்துறையடிகள் காய்ச்சீராலேயே முடியும், எனினும் மிகச்சிறுபான்மை அங்கு நான்கசைச் சீரும் பயின்றுவருதல் உண்டு. |
செந்தமிழ்ப் பாடற் புலவோ ரநேகர் தினம்பரவும் |
கந்தனைத் தென்பழ னாபுரிக் கோயிலில் காணப்பெற்றால் |