அந்தரத் தோரும் முனிவோரும் மோகிப்ப தன்றியெழில் |
மந்தரக் கொங்கை மடவாரும் ஆசிப்பர் மட்டறவே,1 |
இதன்இரண்டாமடியின் ஐந்தாஞ்சீர் தேமாந்தண்பூ வந்தது காண்க. இவ்வாறு மிகஅருகியே வரும் என்பதனால் ஒவ்வோரீற்றில் என்றார். இனி உரையிற்கோடலாக நான்கசைச் சீர்களாக வருவதன்றி வஞ்சியுரிச்சீரும் வரப் பெறும் என்க. இது நான்கசைச் சீர்களைவிடச் சற்று அதிகமாகவே பயின்றுவரும், |
கோணாமல் ஈபவர் தம்மையும் காட்டிக்கொடுப்ப தின்றி |
நாணாதுஎன் பாமிக வேண்டுகின் றாய்இதோர் ஞாயங்கொலோ? |
ஆணாகிப் பெண்ணுரு வாய்அலி யாகி அமரர்என்றும் |
சேணாட்டில் வாழ அமுதூட்டி யாண்ட திதித் தெய்வமே,2 |
இதில் இரண்டாம் அடியின் ஈற்றில் தேமாங்கனியும், ஈற்றடியில் புளிமாங்கனியும் வந்தன. (432) |
34. | நேர்எனத் துவக்கலும் நிரைஎன எடுத்தலும் | | ஆய கட்டளைக் கலித்துறைக்கு இடைவரும் | | மெய்தவிர் எழுத்தின் தொகைபதி னாறும் | | அவற்றொடுஒன்று அணுகலும் ஆம்எனப் பகரினும் | | சுவையறி வில்லாத் துகளுறு மனத்தினர் | | நெடில்குறில் அமைவுறும் நிலைபிறழ்வ அதனால் | | கீழ்மை தோய்வுறக் கிளத்தலும் உளவே. |
|
நேரசையில் தொடங்கும் கட்டளைக்கலித்துறை அடி ஒன்றிற்கு ஒற்று நீங்கப் பதினாறு எழுத்துகளும், நிரையசைக்குப் பதினேழும் வரவேண்டும், இவ்வாறு ஓரடியின் எழுத்து வரையறை கூறப்பட்டாலும் பாக்களின் ஓசை நயத்தை உணரமுடியாத குறைமதியாளர் நெடில், குறில், வல்லொற்று இவற்றின் |
|