யாப்பிலக்கணம்290
மின்னினிடையே செக்கரர விந்தவத னக்கரிய கூந்தலொளி செய்யதிருவே”1 என்பது அதன் இலக்கணம். இலக்கியம் வருமாறு;-
மாடகமு றுக்கியிசை பாடுமுனி
 நீடுபினி மாற்றுமுறைமை
 நாடியுரை செய்தலும கிழ்ந்துகழன்
 மன்னவன யந்துபணியா
 கூடியந லன்பினது கூறுவன
 ருந்தவக தம்பநகரில்
 பீடுறவி ருந்தபெரு மானையெவர்
 பூசனைகள் பேணினர்களே ?
இதனால் நான்கு காய்களும் ஒரு கனியும் வந்தவை யனைத்தும் கலிநிலைத்துறை ஆகாமை காண்க,
(434)
36.கட்டளைக் கலித்துறை கலிநிலைத் துறைஎனும்
 இவற்றின் மோனைக்கு ஈற்றுச் சீர்இசைவு
 என்றுபல் புலவோர் இயம்பினர் அன்றே,
கட்டளைக் கலித்துறை, கலிநிலைத்துறை ஆகிய இரு யாப்பிற்கும் கடைசிச் சீராகிய ஐந்தாம் சீரே மோனை நிற்றற்குப் பொருத்தமானது என்பதால் பல கவிஞர்களும் அவ்வாறே பாடினர் என்றவாறு,
ஐந்தாம் சீரில் மோனை அமைப்பது ஐந்தசைச் சீர்களா லாகிய நெடிலடிகள் அனைத்திற்கும் பொருந்தும்,
(435)
வஞ்சிவிருத்தம்
37.ஈரசைச் சீர்மூன்று இரண்டுஇசைந்து ஓர் அடி
 வருவன வஞசி விருத்தம் ஆமே,
ஈரசைச் சீர்கள் மூன்றோ அல்லது இரண்டோ சேர்ந்து ஓரடியாகிய நான்கு அடிகளால் வருவன வஞ்சிவிருத்தம் ஆம் என்றவாறு.