இருசீரடியான் வருவது வஞ்சித்துறையென்றும், முச்சீரான் வருவதே வஞ்சிவிருத்தம் எனவும் கூறப்படும், “சிந்தடி நான்காய் வருவது வஞ்சியது எஞ்சா விருத்தம் என்மனார் புலவர்,”1“துன்னும் குறளடி நான்கு வஞ்சித்துறை; சிந்தடி நான்கு உன்னும் விருத்தம்: துறை மூன்று ஒரு பொருள் தாழிசையாம்”2 என்பன இவற்றின் இலக்கணங்களாம். இவர் வஞ்சித்துறையையும் விருத்தம் எனவே கொள்வதாகத் தோன்றுகிறது. இவர் பாக்களைத் துறை, விருத்தம், தாழிசை எனப் பாகுபாடு செய்துகொள்ளவில்லை. பல யாப்புகளை இலக்கியங்களைக் கண்டு தெளிந்துகொள்ளுமாறு விட்டுவிடுகிறார். இஃது இந்நூல் 446, 447 ஆம் சூத்திரங்களில் கூறப்பட்டும் உள்ளது. |
சிந்தடி வஞசி விருத்தம் வருமாறு;- |
ஆர மைந்தவி ரண்ணல்பே ரூர மைந்தவு ளத்தினர் |
தார மைந்தர்ச ளந்தொடாச் சீர மைந்தமெய்ச் சித்தரே.3 |
குறளடி வஞ்சி விருத்தம் (வஞ்சித்துறை) வருமாறு;- |
வாய்ந்த பேரையூர் ஏய்ந்த வீசர்தாள் |
தோய்ந்த சிந்தையார் மாய்ந்தி டார்களே.4 (436) |
கலிவிருத்தம் |
38. | நாற்சீர் ஓர்அடி யாம்கவி சிற்சில | | கலிவிருத் தங்கள்எ னக்கவின் தருபவே. |
|
நாற்சீர்களானியன்ற அளவடிகளால் அமைந்த சில யாப்பு வகைகள் கலிவிருத்தங்களாக விளங்குகின்றன என்றவாறு. |
கலிவிருத்த வகைகள் ஒன்றிற்கு மேற்பட்ட தாதலின் சிற்சில என்றார், சில உதாரணங்கள் வருமாறு:- |
|