வெண்டளை பயின்று வந்த ‘திருமந்ர’ வகை. இவ்வாறே பிறவும் உள., வந்துழிக் கண்டு கொள்க. (437) |
39. | ஈரசைச் சொற்கள் ஐந்துஓர் அடியாய் | | வரும்கலி விருத்தமும் மாநிலத்து உளவே. |
|
ஈர்சையாலாகிய சீர்கள் ஐந்தைப் பெற்று வருகின்ற நெடிலடியால் நடக்கும் கலிவிருத்தங்களும் புலமை உலகில் உள்ளன என்றவாறு. |
நெடிலடியாலான கவிகளைக் கலித்துறை என்பர் இலக்கணிகள், “நெடிலடி நான்காய் நிகழ்வது கலித்துறை”1 என்பது யாப்பருங்கலம், வஞ்சியிற் போலவே இவ்வாசிரியர் இங்கும் துறை, விருத்தம் என்னும் ஈரினத்தையும் ஒன்றாகவே கொண்டுள்ளார். |
நெடிலடியான் வந்த கலிவிருத்தங்கள்;-(கலித்துறைகள்) |
கள்ள மின்றிய திருவருட் புலவர்வாய்க் கவியும் |
வள்ள லாமெழு மூவரும் வழங்குகைக் கொடையும் |
எள்ளல் தீர்சிவ யோகியர் தொகையுமே இணையாக் |
கொள்ள நீர்மழை பொழிந்தன பாரெலாங் குளிர.2 |
மா, மூன்று விளம், மா வந்த வகை. இதுவே மிக அதிகமாகப் பயில்கிறது. |
அம்மா ணகருக் கரசன் னரசர்க் கரசன் |
செம்மாண் டனிக்கோ லுலகே ழினுஞ்செல் லநின்றான் |
இம்மாண் கதைக்கோ ரிறையா யிவரா மனெனும் |
மொய்ம்மாண் கழலோற் றருநல் லறமூர்த் தியனான்,3 |
ஐந்து மாச்சீர்கள் வெண்டளையிற் புணர்ந்த வகை, அளவடி நெடிலடிகளால் வருகின்ற பாவினங்களுள் மூவசைச்சீர் கலந்து |
|