| வருபவை பற்பல உள்ளன, இங்கு ஈரசைச்சீரே கூறப்பட்டமையின் அவை காட்டப்பெறவில்லை. (438) |
எண்சீர் வகைகள் |
| 40. | கலிவிருத் தம்சில இரட்டித்து எண்சீர் | | | விருத்தம், கட்டளைக் கலிப்பா, சிறுநிலைத் | | | தாழிசை வரும்எனச் சாற்றிடத் தகுமே, |
|
| முன் கூறப்பட்ட அளவடிக் கலிவிருத்தங்கள் இருமடங்காகி எண்சீர் விருத்தம், கட்டளைக் கலிப்பா, குறுந்தாழிசை என்ற வடிவங்கள் ஆகும் எனலாம் என்றவாறு. |
| இரட்டித்து எண்சீர் என்றதனால் நெடிலடி நீக்கப்பட்டது, | | | விதிவ ழாதபல் லுறைப்புடை மறையின் | | | மிகக் தாருகா யத்திரி யதனின் | | | அதிக மஞ்சமா மந்திர மதனின் | | | ஆறி ரெண்டெழுத் ததனிமெட் டெழுத்தாம் | | | பதியு மேன்மையெட் டெழுத்தினஞ் செழுத்துக் | | | கோடி கோடிமேம் பட்டதஞ் செழுத்தின் | | | அதிலு மேகம்ப நாதமா னுத்தான் | | | நூறு கோடியின் மிக்கதென் றுணர்வீர்1 |
|
| மா, விளம், விளம், மா கூடி இரட்டித்த எண்சீர் வகை. |
| குந்தியங் கொருதினங் கைதொழற் கிரங்கிக் | | | கூடியக் கணம்பெருங் கொடைமகற் பயந்தாய் | | | செந்திரு நாயகன் சிவன்முதற் பலரும் | | | செறிகைநின் னிடையெனுஞ் சீர்த்திசத் தியமேல் | | | பந்திய பசுக்கொலைப் பாதகர் குலவேர் | | | பறித்திடக் கருதெனைப் பார்த்தறி யாயோ? | | | கந்திவண் பொழில்திரு நெல்லையில் தமியேன் | | | கருதிய பயன்பெறக் காணுதி விரைந்தே2 |
|
|