மூன்று விளம் ஒருமா இணைந்து இரட்டித்த எண்சீர் விருத்தம், இவை போல்வன வேறு சிலவும் உள, வந்துழிக்காண்க, |
| தவள வாரண னாதிய தேவர்போல் | | தகுவர்க் கஞ்சித் தயங்குவை யென்றுனைப் | | புவனி யிற்பலர் சொல்கையி லென்மனம் | | புலருந் துன்பமும் போக்கவெண் ணாய்கொலோ? | | குவடு மூன்று பறித்தெறிந்து ஆடகக் | | குன்றும் நாகர்தம் கோனும்ஒல் கச்செயும் | | பவனன் மைந்தனுக்கு ஒன்பதுஇ லக்கணப் | | பண்பு கூறிய பாற்கர மூர்த்தியே,1 |
|
இது கட்டளைக் கலிப்பா, நேர், நிரையில் தொடங்கும் அடிகளுக்கு முறையே பதினொன்று, பனிரெண்டு, பனிரெண்டு எழுத்துகள் வந்தன. |
| உண்டுண் டுதுயின் றெழுமூ ரவருக் | | குறவா கியுழன் றுமுயன் றுபொருட் | | கொண்டுண் கண்மடந் தையருக் கருள்வோர் | | குன்றக் குடியிற் குறுகப் பெறினும் | | வண்டுண் டகடம் பணியும் புயவேள் | | மறலிக் குமதப் பயலுக் கும்வெறும் | | புண்டுன் றுதலைப் பிரமற் குமனம் | | புலரப் பொருமற் புகழைத் தருமே.2 |
|
இது வெண்டளை பெற்ற கலிவிருத்தம் இரட்டியது, இதன் ஓசை விகற்பத்தால் இந்த நூலாசிரியரால் தாழிசை எனப்படுகிறது, |
| சென்னி யாறுடைச் சிவகு ருப்பிரான் | | செங்கை வேல்வலி்த் தீர வேள்குறக் | | கன்னி தாடொழத் துணியு மோகனக் | | கள்வ னெம்பெருங் கடவு ளென்றறிந் |
|
|