யாப்பிலக்கணம்298
இது அறுசீர்த்தாழிசை.
கருநாட தேய முழுதும்பு ரந்து
 கனவண்மை யுற்ற வரசன்
 பொருவாத வீர சைவத்து ளார்கள்
  போற்றச்சி றந்த புனிதன்
 திருவார்கு மார தேவப்பெ யர்ச்சு
  சீலன்சி வன்ற னருளால்
 ஒரு தாய்வ யிற்று ணுழையாத முத்தி
  உறுமாறு நாடி னனரோ,1
இது எழுசீர்த்தாழிசை.
(440)
42.அறுசீர் எழுசீர் இரட்டிய விருத்தப்
 பகுதியும் தாழிசைப் பகுதியும் உளவே..
அறுசீர் விருத்தங்களும் எழுசீர் விருத்தங்களும் இரட்டித்து முறையே பன்னிரு சீர், பதினான்கு சீர் ஆசிரிய விருத்தங்களாக வரும். இவ்வாறு பன்னிரண்டு, பதினான்கு சீர் பெற்றவற்றுட் சில தம் ஓசை விகற்பத்தால் தாழிசைகள் எனப்படும் என்றவாறு.
பன்னிரு சீர், பதினான்கு சீர் ஆசிரிய விருத்தங்கள் நன்கு அறியப்படுவனவே, இவர் தாழிசை என்பதற்கு உதாரணம் வருமாறு:-
மலியுங் கருணை விழியான் வானோர் பரவு பெருமான்
வடிவேன் முருகக் கடவுண் மயில மலைச்சண் முகவேள்
ஒலிதங் கியதிண் கழல்சேர் உபய சரணங் கருதி
உருகித் தொழுமெய் யடியார்க் குரிய பணிகள் புரிவார்
கலியை மதனை விதியைக் காலன் றனையுண் மதியாற்
கவலைக் கடலிற் சுழலார் கமழ்செந் தமிழ்முற் றுணர்வார்