புலியைக் கரியை யுரித்தார் போலுஞ் சிலரைப் பணியும் |
புனிதச் சமயம் ஆறும் புகழத் திகழ்கின் றவரே,1 |
இது பெரும்பாலும் வெண்டளை பெற்றுவந்த பன்னிருசீர்த் தாழிசை, |
தாதி மாரைவிடு தூது தீதுமிகு |
தன்மை கொண்டதென உன்னியே |
தத்தை தன்னைவிடி லுற்ற பச்சையுமை |
தன்க ரக்கிளியொ டாடுமே |
ஓதி மந்தனைவி டுக்கின் முன்பகர்பொய் |
ஓதி மந்தனைநி கர்க்குமால் |
ஓர நாரைகொள்வி கார மார்குரலி |
போதி லொன்றுமளி தேன ருந்தியுறு |
போத மங்கழியு மேகமோ |
போயி ணங்குசடை யூடி சைந்துதடை |
பூணு மிங்கெவரை ஏவுவேன் |
ஆதி யந்தமுற யானு றுந்துயர்கள் |
ஆன நன்கறியெ னெஞ்சமே |
ஆத ரம்பெருகு பேரை நம்பர்கடி |
தாக வந்திடவி யம்பிடே,2 |
இது மா, காய் மும்முறைவந்து ஏழாவதாக விளம்பெற்று இரட்டித்த பதினான்குசீர்த்தாழிசை, (441) |
43. | ஐஞ்சீர் மேல்வரும் விருத்தம் பலவும் | | ஆசிரி யங்கள்என்று அறைவார் பலரே |
|
ஐந்து சீர்களால் வரும் நெடிலடிக்கு மேற்பட்ட கழிநெடிலடிகளால் வரும் விருத்தங்களைப் பல புலவர்கள் ஆசிரிய விருத்தங்கள் என்று கூறுவார்கள் என்றவாறு. |
|