யாப்பிலக்கணம்300
சீர்களின் எண்ணிக்கையால் அடிகள் பெயர் பெறுதலை இவ்வாசிரியர் எங்கும் கூறவில்லை. எனினும் அதில் நன்கு பழக்கப்பட்டவர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காக உரையில் அப்பெயர்கள் ஆளப்படுகின்றன.
(442)
வேற்றொலி வெண்டுறை
44.ஈரடி பேதித்து இசையும்நா லடிப்பா
 வேற்றொலி யாமென விளம்பினர் சிலரே,
முதல் இரண்டடிகளும், அடுத்த இரண்டு அடிகளும் ஒரே யாப்பால் அமையாது வேறுபட்டுள்ள நான்கு அடிகளை உடைய பாவினம் வேற்றொலி எனப்படும் என்றவாறு.
வேற்றொலி வெண்டுறை நாலடிப்பாவாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதி பிற இலக்கணங்களுள் கூறப்படவில்லை. மூன்றடியிலிருந்து ஏழடி வரையிலும் அடிகள் வரலாம். ‘மூன்றடி முதலா ஏழடி காறும்வந்த ஈற்றடி சிலசில சீர்குன்றினும் அவை வேற்றொலி விரவினும் வெண்டுறை”1 என்பது தான் இதன் இலக்கணம். எனினும் இவராலியற்றப்பெற்ற ஆறு கலம்பகங்களிலும் வேற்றொலி வெண்டுறை நாலடிகளையே கொண்டுள்ளது. எடுத்துக்காட்டு:-
சற்குருவா மவர்பலரிற் றலைமைபெறு
  பழனிமலைத் தண்ட பாணி
நிற்குநிலை யுணர்ந்தவன்றன் எழுத்தாறுஞ்
சந்ததமும் நிகழ்த்த வல்லார்
கற்கும்நா வலர்பெருங் கருணை மாதவர்
விற்குனித் தமர்செயும் விறற்கை வீரரே,2(443)
45.அடிதொடை கூடியும் குறைந்தும் பிறழ்ந்தும்
 வருவன வெண்டுறை யாம்என்று அவற்றிற்கு
 இயைந்ததோர் பெயரே இட்டனர் புலவோர்.