அறுவகையிலக்கணம்301
அடிகளும் சீர்களும் தம்முள் ஒவ்வாமல் அதிகமாகவும் குறைந்தும் வருவனவும், ஒரு செவ்விய வடிவமில்லாமல் மாறி வருவனவுமாகிய பா வெண்டுறை ஆகும். புலவர்கள் இதற்களித்த பெயர் சாலப்பொருத்தமாம் என்றவாறு.
வெண்மை என்பது அறியாமையைச் சுட்டும், வெள்ளைச் சொல், வெள்ளறிவு போன்றவை காண்க. நான்கு அடிகளை ஒரே ஓசை வர ஆற்றொழுக்காக இயற்ற அறியாதவரால் இயற்றப்பட்ட பா வெண்துறை ஆயிற்று, இங்குப் பாடியவரின் அறியாமை பாவின் மேல் ஏற்றப்பட்டது, முட்டாள்தனமான வார்த்தை என்ற உலக வழக்கைப்போல இவ்வாசிரியர் பாவினங்களின் வடிவத்தில் ஓர் ஒழுங்கும், கட்டுக்கோப்பும் இன்றியமையாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியுடையவர். ஒரே கவியில் அடிகளையும் சீர்களையும் கூட்டியும் குறைத்தும் ஏன் பாடவேண்டும் என்பது இவர் வினா ? இதனால்தான் இவர் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாப் போன்ற சில பழமையான பா வடிவங்களைக் கூடத் துணிந்து எள்ளி சில பழமையான பா வடிவங்களைக் கூடத் துணிந்து எள்ளி நகையாடுகிறார். இஃது அடுத்த நூற்பாவால் விளங்கும்.
(444)
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
46.கொச்சகத் தடிசில இரட்டித்து அணைந்தபின்
 குறிலே நிரைபடும் சிலசீர் தோய்ந்து
 முற்படு பகுதியே மறுத்தும் தோன்றியும்
 இருசீர் முச்சீர் நாற்சீர்ப் பாவொன்று
 ஒன்றே நின்றுபின் தனிச்சொல் உற்றும்
 பின்நிலை மண்டில அகவலா முடிக்கும்
 அஃதையும் ஒருநூல் அணிமுகத்து அமைத்தற்கு
 ஒப்பிய மனுத்திரள் வேறொரு விதமாய்த்
 திரித்துஇது கொங்கணி மங்கணிப் பாட்டென்று
 இயம்பினும் ஆமாம் என்னும்; ஆதலின்
 சுவைமிகத் தொடுப்பவை அனைத்தும் நலமே.
கொசசகக் கலிப்பாவின் அடிகள் சிலவற்றை இரட்டைப் படை எண்பெற அமைத்தபின் (தரவு), குற்றெழுத்துகளாலேயே நடக்கும் சில சீர்களையும் சேர்த்து (அராகம்), முன்