வேந்தற்கும் முனைவற்கும் விலங்கிற்கும் அருள்துறவாத் |
தோந்தீரத் துறந்தநின் துறவரசும் துறவாமோ?1(இவைதாழிசை) |
தரவும் ஈரடிக் கலிப்பா அடிகளே; தாழிசையும் அவையே இவற்றுள் பாடுபொருளானன்றி யாப்பு வடிவத்தாலோ அல்லது ஓசையாலோ மாற்றமில்லை. இவ்வாறிருக்க முற்பகுதியைத் தரவென்றும், பிற்பகுதியைத் தாழிசை என்றும் அழைப்பானேன்? இது முற்றிலும் செயற்கையான பொருளற்ற பாகுபாடாகும். மற்றொன்று:- |
“காமர் கடும்புனல்” என்னும் குறிஞ்சிக்கலியில் செம்மையான இன்னிசை வெண்பாக்களும், குறள்வெண்பா ஒன்றும் தாழிசை என்ற பெயரில் வந்துள்ளன பல கலிப்பாக்களுள் சிந்தியல் வெண்பாக்களைத் தாழிசை என்ற பெயரில் காணலாம் பழமையானது என்னும் ஒரே காரணத்தால் கண்மூடித்தனமாக ஏற்றிப் போற்றாமல் யாப்பின் இந்த வடிவங்கள் யாவும் நன்கு திருத்தமுற அமைந்துள்ளனவா என ஆராய்ந்தால் நடுநிலையாளர்கட்கு எதிர்மறை விடையே கிடைக்கும். |
இவ்வியல்பின் 29 ஆம் நூற்பாவாகிய அம்மானை முதல் இதுவரை கூறப்பட்டவை அனைத்தும் இசைத் தமிழிற்கு உரியனவாகக் கொள்க. (445) |
47. | பாநிலை தெரிதற் பொருட்டே பற்பல | | நூல்களும் பார்க்கும் நுண்ணியர்க்கு யாம்பகர் | | சகத்திர தீபமும் வருடப் பதிகமும் | | என்னும் துணைநூல் இனியநற் றுணையே, |
|
பலவகையான பாக்களின் இயல்பை ஆராய்வதற்காகவே மிகப்பல நூல்களைக் கற்கும் அறிஞர்களுக்கு எம்மால் இயற்றப்பெற்ற சகத்திரதீபம், வருடப்பதிகம் என்னும் இரு நூல்களும் சுவைதரும் நல்ல உதவி நூல்களாம் என்றவாறு. |
சகத்திர தீபம்:- இது திருவண்ணாமலையில் இயற்றப்பெற்ற நூல். ஒரு யாப்புவகைப் பத்துப் பாடல்களாக நூறு யாப்பனியற்றது, பாயிரம், நூற்பயன் உட்பட ஆயிரத்து நான்கு பாடல்களை உடையது. |
|