தூய இலக்கியமும் பிறழ்ந்து கிடக்குமோ எனின் சிற்சில இடங்களில் கிடக்கும், உதாரணமாக வெண்பாவில் நாலசையைச் சில சமயங்களில் மூன்றசையாகக் கொள்கிறோம், குற்றியலிகர வுகரங்களைஇடம் நோக்கிக் கொள்ளவோ தள்ளவோ செய்கிறோம். ஆசிரிய விருத்தங்களில் காய்ச்சீர் வரும் இடங்களில் குறில்நெடிலிணைந்த விளத்தால் இறும் ஈரசைச் சீர்களை முச்சீராக ஏற்கிறோம். இவை போல்வன சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாம். இதன் நுட்பங்களைத் தெளிவாக விளக்கிக் கூறவே சிறந்த அறிஞரின் துணை வேண்டப்படுவதாயிற்று. |
இக்கருத்து இவரால் பிறிதொரு நூலின்கண், “முன்னவர் சொல் வாய்ந்த பல நூலில் வண்மையதும் புன்மையதும் ஆய்ந்த கவியாலறியலாம்” எனவும் “சொல்லிற் பனமுடைய தொண்டர்திருக் கூட்டத்தால் கல்விப் பயனதனைக் காணலாம்-பல்வினையும் போக்கலாம் ஆனந்த போகப் பொது விளைவுண் டாக்கலாம் வீடுபெற லாம்”1 எனவும் கூறப்பட்டுள்ளது. (447) |
49. | இயல்இசை என்னும் இருவகைத் தமிழுக்கு | | ஆமாறு இந்தமட்டு அடக்கிக் கூறினம்; | | நாடகத் தமிழ்நிலை நவிலுதும் சிறிதே, |
|
இயற்றமிழ் இசைத்தமிழ் என்னும் இருவகைப்படும் பா வகைகளின் இலக்கணத்தை இந்த அளவு சுருக்கமாக உரைத்தோம். இனி அடுத்து நாடகத்தமிழின் இயல்பையும் சற்றுக் கூறுவாம் என்றவாறு. |
தமிழுக்கு ஆமாறு என்புழித் தமிழ் என்றது தமிழ்க் கவிகளை. இந்தச் சூத்திரத்தால் இப்பகுதி நிறைவு செய்யப்பட்டு அடுத்த பகுதியாகிய நாடகத் தமிழ் நிலைக்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்படுகிறது. (448) |
|