அறுவகையிலக்கணம்307
கூறினால் கீர்த்தனை என்றும், உலகியற் காதலாகிய சிற்றின்பத்தை உரைத்தால் பதம் என்றும் புலவர்கள் கூறுவர் என்றவாறு.
தாளம் பிழையாது என்றமையின் இராகத்திற்கேற்ப என்பது தானே பெறப்பட்டது. பல்லவி முதலியன எவ்வாறு அமைய வேண்டும் என்பன இசை நூலாதலின் இங்கு கூறப்படவில்லை, இந்த அளவுகளும், எண்களும் இவ்வாறேதான் வரவேண்டுமென்பதும் இல்லை என்பது 52, 53 ஆம் நூற்பாக்களால் தெளிவாகிறது. இது பதம், கீர்த்தனை பற்றிய ஏகதேச இலக்கணமே ஆகும். மொழி இலக்கணத்தில் இவ்வளவே கூற முடியும், இதனால்தான் இப்பிரிவே நிலை எனப்பட்டது.
இவர் கீர்த்தனை, பதம் ஆகிய இரண்டும் வடிவத்தால் ஒன்றே எனவும் பாடு பொருளால்தான் வேறுபடுகின்றன எனவும் கூறுகிறார், ஆனால் இசை வல்லுநர் இக்கருத்தை ஏற்பதாகத் தெரியவில்லை, வர்ணம், கிருதி அல்லது கீர்த்தனை, பதம் ஆகிய மூன்றும் வேறுவேறானவை என்பது அவர்கள் கருத்து, கீர்ததனைகள் எல்லா இராகங்களிலும், எல்லாத் தாள கதிகளிலும் வரலாம், ஆனால் பதங்கள் ரத்தி இராகங்களிலும் விளம்ப காலத்திலுமே அமைய வேண்டும், ஆனால் பதங்களின் பாடுபொருள் மதுரபக்தி என்னும் காதற்சுவை என்பது இருவருக்கும் உடம்பாடே., எல்லாப் பதங்களும் நாட்டியத்திற்கு ஏற்றவையே., ஆனால் அனைத்துக் கீர்த்தனைகளும் நாட்டியப் பாடல்களாகா, (ஆதாரம்;- தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 27, 28, 8, 1982 இல் நடைபெற்ற இசைக் கருத்தரங்கில் வாசிக்கப் பட்ட கீழ்க்கண்ட இரு ஆய்வுக்கட்டுரைகள்,
1. தமிழ்ப் பதங்கள் - டாக்டர் திருமதி கௌரி குப்புசாமி, மைசூர்,
2. கர்நாடக இசையில்பதங்கள் - திரு, ஏ, நடராசன், திருப்பதி,
(449)
51.அநுபல் லவமும் சரணம் அளவில்
 கூடினும், தாளம் குழம்பாது, யாவரும்
 அறிவுறும் பொருள்அமைந்து அவிர்தரின் நலமே.