யாப்பிலக்கணம்312
54.வீணையில் தேர்ந்தோன் விளம்பு மாற்றம்
 தழீஇக்கொளல் நாடகத் தமிழினுக் கழகே
 ஆயினும் பொருட்சுவை அழியினும் இயலிசைச்
 சொல்மிகப் புணரினும் சோர்வு படுமே.
இசையாசிரியன் கூறும் கருத்துகளையும் தழுவி ஏற்றுக் கொள்ளுதல் நாடகத்தமிழ் மரபிற்கு ஏற்றதே ஆகும் என்றாலும் இசையை நோக்கிப் பொருட்சிறப்பு இல்லாமல் அமைந்தாலோ அன்றி இயலிசைத் தமிழ்க்குரிய திரிசொற்கள் மிகவும் அதிகமாகச் சேர்ந்தாலோ அப்பாடல் தரங்குறைந்துவிடும் என்றாவாறு.
வீணையில் தேர்ந்தோன் என்பது இங்கு இசைநூல் வல்லான் என்ற கருத்தில் ஆளப்பட்டது.
(453)
55.வண்ணச் சீர்பொடு வயங்கும் நாடகத்து
 இசைத்தமிழ்ச் சொற்கள்வந்து இசையினும் தகுமே,
சந்தக்குழிப்புகளால் அமைந்த சீர்களைக் கொண்டுள்ள நாடகப் பாடல்களில் இசைத்தமிழிற்குரிய சொற்கள் வந்து சேர்ந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்றவாறு,
சந்தக்குழிப்புகளைப்பற்றி அடுத்த பகுதியில் கூறப்படும். இயற்றமிழ்ச் சொல் கருஞ்சொல்லாகவும், இசைத்தமிழ்ச் சொல் செஞ்சொல்லாகவும், நாடகத்தமிழ்ச் சொல் வெண்சொல்லாகவும் இருக்கவேண்டும் என இவரால் இந்நூல் 171 ஆம் நூற்பாவில் கூறப்பட்டது, 453 ஆம் நூற்பாவில் நாடகத் தமிழில் கரிய செய்யசொற்கள் விலக்கப்பட்டன, இச்சூத்திரத்தில் வண்ணம் பயின்ற நாடகத்தமிழில் ஓரளவு செஞ்சொற்கள் ஆளப்படலாம் எனத்தழுவிக் கொள்ளப்பட்டது, இதனால் நாடகத்தமிழில் எக்காரணங் கொண்டும் இயற்றமிழிற்கே சிறப்பாக உரிய கருஞ்சொற்கள் வரலாகாது என விலக்கப்டடதாயிற்று.
(454)
56.புலமைக்கு ஆள்எனப் போதன் பொறித்த
 தலையினற்கு யாப்பியல் பதனைச் சாற்றிடல்
 பாய்தொழிற் புலிக்குஅது பயிற்றல் போலும்;