யாப்பிலக்கணம்314
57.இயல்முத லாகிய பகுதியை அடுக்கி
 முத்தமிழ்ப் பாமா லையில்மொழிந் தனமே,
இயல், இசை, நாடகம் என முக்கூறுபட்டவற்றை நிரலே அமைத்து முத்தமிழ்ப் பாமாலை என்ற சிற்றிலக்கியத்தில் காட்டியுள்ளோம் என்றவாறு,
முத்தமிழ்ப் பாமாலை:- இந்நூலாசிரியரால் இயற்றப்பெற்ற இந்நூல் திருவாமாத்தூர்க் கௌமார மடாலயத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளது., பாயிரம் 3 கவிகள், நூல் 30 பாடல்கள், நூற்பயன் ஒரு கவி ஆக அந்நூல் 34 கவிகளானியற்றது. நூல் 30 பாடல்களும் மண்டலித்த அந்தாதி ஆகும். 1, 4, 7 எனவரும் பாடல்கள் இயற்றமிழ் எனப்பட்டுள்ளது. இப்பிரிவில் வருகின்ற யாப்பு வகைகள் ஆசிரியப்பா, வெண்பா, மருட்பா, குறளடி வஞ்சிப்பா என்பனவாகும், 2, 5, 8, 11 என வரும் பாடல்கள் இசைத்தமிழ் ஆகும், இவற்றுள் அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், கட்டளைக்கலித்துறை எழுசீர்த்தாழிசை, கட்டளைக்கலிப்பா, கொச்சகக்கலிப்பா, சந்தவிருத்தம் ஆகிய யாப்பு வகைகள் இடம் பெற்றுள்ளன., 3, 6, 9, 12 என வருவன பத்தும் கீர்த்தனைகளே.
இச்சூத்திரத்தால் நாடகத் தமிழ்நிலை என்னும் இப்பகுதி நிறைவு செய்யப்படுகிறது. வழக்கமாக முதல் பகுதியின் ஈற்று நூற்பாவிலேயே அடுத்த பகுதிக்குத் தோற்றுவாய் செய்து கொள்ளும் இயல்புடைய இவ்வாசிரியர் வண்ணத்தின் மீது இவருக்குள்ள பெரும் பற்றின் காரணமாகவோ என்னவோ தோற்றுவாயையும் தற்சிறப்புப் பாயிரம் போன்றே அங்கு அமைத்துக் கொண்டுள்ளார்.
(456)
நாடகத்தமிழ் நிலை முற்றிற்று.