யாப்பிலக்கணம்320
பின் நீடல் ஆன தத்தாச் சந்தமும் தோன்றும். மெல்லின மெய் வல்லுயிர்மெய்யோடு பொருந்துவதால் தந்தச் சந்தமும், அதன் முன் பின் நீண்ட தாந்த, தந்தா என்பனவும் தன்னச்சந்தமும் வரும், இடையினத்து ஒற்று நன்கு ஒலிக்கப்படும்போது தய்யச் சந்தத்தை உண்டாக்கும். தனச் சந்தமும், இதன் முன் பின் நீட்சியால் வரும் தான, தனா எனுமிரண்டும் அனைத்து இனங்களையும் கொண்டு பொதுவாக வரும் என்றவாறு.
இந்நூற்பா எந்தஎந்தச் சந்தங்களில் எவ்வெவ் வகையான எழுத்துகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. நெய்த்து, கர்த்தன், என்பன தத்தச் சந்தமெனினும் இவற்றிலுள்ள இடையின மெல்லின மெய்கள் (ய், ன்) ஒலிப்பதில்லை தத்தச் சந்தத்திற்கு முக்கிய ஒலி வல்வெழுத்துகளால் வருகிறது. அவ்வாறே தந்தச் சந்தத்தில் மெல்லின வல்லனப் புணர்ப்பே முக்கியமானது, மெல்லினமெய் தன்னின அல்லது இடையின உயிர்மெய்யுடன் கூடித் தன்னச் சந்தத்தைத் தோற்றுவிக்கிறது, இடையினமெய் இடையின உயிர்மெய்யோடு சேரும்போது மட்டுமே நன்கு ஒலிக்கும். அப்போது தய்யச் சந்தம் வரும், இடையின மெய்கள் ஒலித்தால் தய்யச் சந்தம், வல்லின மெல்லின மெய்களுடன் சேர்ந்த - ஒலிக்காத இடையின மெய்க்கு ஓசை இல்லை, தன, தான, தனா மூன்றும் இனப்பாகுபாடின்றிப் பொதுவாக வரும்,
(458)
60.தத்தவும் தன்னவும் தய்யவும் தனவும்
 நால்வகைக் குலம்என நவிலத் தகுமே,
தத்த, தன்ன, தய்ய, தன என்பனவற்றை முறையே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று கூறலாம் என்றவாறு.
இவர் ஏழாமிலக்கணத்தில் யாப்பு வகைகளுக்கும் வருணம் கூறுவார் இங்குச் சந்தங்களுக்கும் கூறுகிறார். இது இந்நூலாசிரியர் காலச் சமுதாய அமைப்பின் தாக்கம் ஆகும். இத்தகைய கருத்துகளை ஆழமாகவும் அகலமாகவும் ஆராய வேண்டியதில்லை.
!(459)