61. | இருவகைச் சந்தமும் பிறழும் சிற்சில | | ஐந்தாங் குலம்என்று அறைவது முறையே. |
|
தன்ன, தய்ய ஆகிய இரு சந்தங்களும் சில இடங்களில் மாறுபடும், அவ்வாறு மாறுபடுமிடங்களில் அவற்றை ஐந்தாங்குலத்தைச் சேர்ந்தனவாகக் கொள்ளவேண்டும் என்றவாறு. |
“குறிலுடன் இடையினத்து ஒற்றும் மெல்லினத்து உயிர்மெய்யெழுத்தும் ஒன்றினும், அஃதோடு அவற்றின் ஓரொற்று அ ணு கிற்றாயினும் தன்னவும் தய்யவும் பிறழுமன்றே”1 “பொய்மை என்பதும் வர்மம் என்பதும் மெய்ம்மை என்பதும் தன்னவும் தய்யவும் பிறழ்வதன் உதாரணம் என்பர் பெரியோர்”2 என்பன வண்ணத்தியல்பு நூற்பாக்கள். (460) |
62. | தத்தவும் தந்தவும் தாத்தவும் தாந்தவும் | | ஆண்பால் ஆம்என்று அறைவது முறையே, |
|
தத்த, தந்த, தாத்த, தாந்த ஆகிய நான்கு சந்தங்களையும் ஆண்பாற் சந்தங்களாகக் கொள்ளல் தகும் என்றவாறு, |
இவை வன்மையான ஒசை உடையனவாதலின் ஆண்பால் என்றார். (461) |
63. | தன்னவும் தய்யவும் தனவும் தானவும் | | பெண்பால் ஆம்எனப் பேசிடல் தகுமே. |
|
தன்ன, தய்ய, தன, தான என்னும் நான்கு சந்தங்களையும் பெண்பாற் சந்தங்கள் எனலாம் என்றவாறு, |
இவை மென்மையான ஓசை உடையனவாதலின் இவ்வாறு கூறப்பட்டது. (462) |
64. | தானவும், தய்யவும், தன்னவும், பிறழ்வன | | அனைத்தும் அலிப்பால் ஆம்எனல் முறையே. |
|
|