யாப்பிலக்கணம்322
தாய்ய, தான்ன என நின்று, தான என வரும் பிறழ் சந்தமும், தய்ய தன்ன எனப் பிறழ்ந்தவையும், இவ்வாறு மாறி வருவன அனைத்தையும் அலிப்பால் எனலாம் என்றவாறு.
தன்ன, தய்ய என்ற சந்தங்களில் முதல் எழுத்து நெடிலானால் அது தான்ன, தாய்ய ஆகாமல் தான எனவே ஒலிக்கும், (ஆன்நெய், தாய்மை) தய்ய தன்ன பிறழ்வ முன் அறுபத்தொன்றாம் நூற்பாவில் கூறப்பட்டது. இவ்வாறு பிறழ்ந்து வருவனவற்றையே அலிப்பால் என்கிறார்.
முன் நூற்பாவில் கூறியது இயல்பாக வரும் சந்தங்களை, இது பிறழ்ந்து வந்தனவற்றை, இதுவே இரண்டிற்கும் உள்ள வேறுபாடு.
காது - இயல்பான தானச் சத்தம் - பெண்பால்
ஆன்நெய் - பிறழ்ந்த தானச் சத்தம் - அலிப்பால்
வள்ளி, கன்னி - இயல்பான தய்ய, தன்னச் சந்தம் - பெண்பால்
பொய்மை, பொய்ம்மை என மெய்மிக்கு வந்த தன்னச் சந்தம் - அலிப்பால்,
பிறழ்வன அனைத்தும் என்றதனால், “தன்னவும் தய்யவும் சாற்றும் சொற்களில் ஒற்றின் பின்வரும் உயிர்மெய் வேறேல் சந்தி வேற்றுமையில் தன எனப்படுமே”1 என்ற பிறழ்ச்சியையும் கொள்க.
(463)
65.தத்தா எனவரல் ஆதியைப் பெருக்கிக்
 குசக்குலம் முதலிய கூறலும், பிறழ்ச்சியின்
 நீட்சி பற்றிக் கன்மரம் ஆதிய
 முதிர்அலி வகுத்தலும் முறையே ஆயினும்
 பயனின்மை கருதிப் பகர்ந்திலம் அன்றே.
தத்தா, தந்தா, தனா என்பன போன்று ஈறு நீண்ட சந்தங்களைப் பலவாறாக விரித்துக் குயவர்களினம் என்று சொல்லலாம், கன்மரம் என்ற சொல் தன்ன என வந்த இடத்துப்