பிறழ்ச்சியோடு நீட்டலும் பெற்றதால் அலித்தன்மையில் முதிர்ச்சி பெற்ற சந்தம் எனலாம், இவ்வாறு எல்லாம் கூறலாமாயினும் இவற்றால் பயனின்மை கருதிக் கூறிற்றிலம் என்றவாறு. | தத்த, தந்த, தன ஆகிய சந்தங்கள் ஈறு நீண்டு தத்தா முதலியன ஆயின, கன்மரம் என்ற சொல்லில் கன்ம என்பது தன்னச் சந்தம், ஒரு குறிலும் ஒற்றும் சேர்ந்து கன்மரம் என வந்தால் தன்னன ஆகும். இதுவே சந்தி வேற்றுமையில் தன எனப்பட்டால் தனனச் சந்தம் ஆகிவிடும், அப்போது தன்னச் சந்தம் தனவாகப் பிறழ்ந்ததோடு இறுதி நீடலும பெற்றது, அவ்வாறு வருமிடங்களில் அலித்தன்மை மிக்கதாகக் கொளலாம் என்கிறார். இவ்வண்ணம் பலவாறு பிரித்துப் பிரித்துப் பெயரிடுவதால் இலக்கிய ஆட்சிக்குச் சற்றும் பயனில்லை என்பதுவும் நூலாசிரியரால் தெளிவாக்கப்பட்டது. இக் கருத்தை இவ்வியல்பின் அறுபதாம் சூத்திரத்திலிருந்து இந் நூற்பாவரை அனைத்திற்கும் ஏற்புடையதாகக் கொள்ளலாம். (464) | 66. | எவ்வழி எவர்எவர் இயம்பும் வண்ணமும் | | ஆறு சமயமும், அவற்றின் புறம்பும் | | வீறு பொதுநெறி விளக்கமும் போன்றுஓர் | | எண்வகைத் தாகி இலங்குறும் எனத்தேர்ந்து | | இயம்புநர்க்கு அருட்பேற்று இச்சைஉண் டாமே. |
| இறைவனின் தன்மை பற்றி யார் யார் எப்படிஎப்படி உரைத்தாலும் அவை யாவும் ஆறு சமயங்கள், சமயாதீதம், சமரசம் என்னும் எட்டினுள் ஒன்றாக அடங்கிவிடும், அது போலவே எல்லா வகையான சந்தங்களும் முன் கூறப்பட்ட தத்த முதலிய எட்டினுள் அடங்கிவிடும், இதனை உணர்ந்து இறையுணர்வுடன் சந்தப்பாடல்களைப் பாடுபவர்க்கு அவனருளைப் பெறவேண்டும் என்னும் பேராவல் ஏற்படும் என்றவாறு. | “இன்னும் ஒருக்கால் எழுத்து உரு ஒருவன் காட்ட உணராக் கதிபெற நாடி முயலவல் லானே முழுப் புலமையன்”1 என்பது இவர் கருத்தாகும். எனவே மொழிப் புலமையையும் | |
|
|