இறையருள் நாட்டத்தையும் எப்போதும் இணைத்தே கூறுவார், மேலும் சந்தப் பாடல்களின் பாடுபொருளைப் பற்றி இவர், “தமது வேட்கையும் தன்மையும் விரும்பும் தெய்வச் சீரும், செழுந்தமிழ்க்கு அழகாம் வண்ணப் பாவா வழங்கலும் முறையே”1என்கிறார், | சௌரம், சைவம், சாக்தம், வைணவம், காணாபத்தியம், கௌமாரம் என்பன ஆறு சமயங்கள், இந்த அறுசமயக் கடவுளர்க்கும் மேற்பட்ட பரம்பொருள் ஒன்று உண்டு, அது இவற்றுள் ஊடுருவிக் கலந்தும், தனித்தும் இருக்கும் என்பது சமயாதீதம்., “கடவுளாகய உள்பொருள் என்னால் வழிபடப்படும் ஒன்றே, அதுவே பல்வேறு பெயர் வடிவங்களுடன் பலரால் வழிபடப்படுகிறது” என்பது சமரசம், எல்லாச் சமங்களையும் இந்த எட்டினுள் அடக்கிவிடலாம், அவ்வாறே கணக்கற்ற குழிப்புகளையும் கூறப்பட்ட இந்த எட்டு அலகுகளில் அடக்கலாம் என்கிறார். | “கல்வி என்பது சகல நூற்களையும் கற்றுப் பிரசங்கிப்பது அல்ல, தெய்வ நிச்சயமும், திருவருட் பிரசாத விருப்பமும், அதற்குத் தக்க முயற்சியும் ஏற்படப் பெறுதலேயாம்”2 ஆதலின் அருட்பேற்று இச்சையுண்டாமே என்றார். (465) | 67. | தன்னவும் தய்யவும் தனஎனத் தொனிதரு | | சந்திவேற் றுமையிடை மெய்க்குஎலாம் அதனதன் | | வருக்கத்து உயிர்மெய் தான்வர வொண்ணாது; | | இம்முறை அந்நூல் இனத்தைச் சுட்டிடல் | | போல்சிலர் மயங்கப் புகன்றது அன்றே, |
| தன்ன, தய்ய ஆகிய இரு சந்தங்களிலும் நடுவில் உள்ள மெய்யெழுத்தைத் தொடர்ந்து அதன் இனத்தைச் சேர்ந்த உயிர்மெய்க் குறிலே வந்தால் எந்த இடத்திலும் அது தன என ஆகாது. தன்னினம் வரவொண்ணாது என்ற வாய்பாட்டால் கூறும் இம்முறை வண்ணத்தியல்பு நூலில் (மெய்யடுத்த குறிலின்) | |
|
|