யாப்பிலக்கணம்326
போன்ற தன் உயிர்மெய்யே பெற்ற தன்ன தய்யச் சந்தங்கள் தன என மெலியாது என்பது பெறப்பட்டது,
(466)
68.இருவகை வண்ணம் ஒன்றொடொன்று இசைவுறும்
 இடத்தைச் சந்திஎன்று இயம்புவர் பெரியோர்.
இரண்டுவகையான சந்தங்கள் தம்முள் பொருந்தும் இடத்தைப் புலவர்கள் சந்தி எனக்கூறுவர் என்றவாறு.
தத்ததந்ததன தத்ததந்ததன தத்ததந்ததன தனதானா என ஒரு குழிப்பை எடுததுக்கொள்வோம், இதில் தத்த என்ற சந்தமும் தந்தவும் இணைவது முதல் சந்தி, தந்வும் தனவும் இணைவது இரண்டாவது சந்தி. தனவும் தத்தவும் இணைவது மூன்றாவது சந்தி. இக்குழிப்பில் இவ்வாறே பத்து சந்திகளையும் காண்க.
(467)
69.மெல்லின மெய்யீற்று உள்ளவண் ணத்தொடு
 வல்லினத்து உயிர்மெய் முதல்உள வண்ணம்
 பொருந்தில் இரண்டரைச் சந்தம் எனலாம்;
 இரண்டே ஆம்என்று உரைப்பார் சிலர்; அது
 குத்தல் என்று உரைக்கும் குற்றம் ஆமே
ங.ஞ,ண,ந,ம,ன, ஆகிய மெல்லின ஒற்றுகளால் முடியும் ஒரு சந்தத்தோடு வல்லின உயிர்மெய்யைத் தன் முதலெழுத்தாகப் பெற்றதொரு சந்தம் சேர்ந்தால் அதன் கூட்டத்தை இரண்டரைச் சந்தம் என்று கொள்ளலாம். அங்ஙனமின்றிச் சிலர் இரண்டு சந்தமாகவே கொள்வர். அவ்வாறு கொண்டால் வரும் ஓசை வேறுபாடு குத்தல் என்னும் குற்றமாகக் கொள்ளப்படும் என்றவாறு,
தத்தா தந்தா என்ற குழிப்பில் எற்காண் கந்தா, சம்போ, தந்தாப், பண்பீர் என வருவதாக வைத்துக் கொள்வோம் மெல்லினமெய் முன் வல்லினம் வந்தால் நன்கு ஒலிக்கும். அது சதுக்குத் தந்தாந் தந்தா போல் தொனிக்கும். (எற்காண் கந்தா எற்காண் மங்காய் என்பனவற்றைத் தனித்தனியே உச்சரித்துப் பார்த்தால் இவ்வேற்றுமை தெரியும்) இரு சந்தங்