அறுவகையிலக்கணம்327
களையும் விட்டிசைத்துப் படித்தால் இரு சந்தமே வருவதால் அவ் வண்ணமே கொள்ளலாம் என்பார் கூற்றை மறுத்துப் புணர்ச்சியில் ஓசை மிகுதலின் அவ்வாறு வருதல் குத்தல் என்னும் ஒலிக்குற்றம் ஆகும் என்று கூறுகிறார். எனவே குழிப்பு இரு சந்தமாக உள்ள இடங்களில் மெல்லொற்றின் முன் வல்லினம் வரலாகாதென விலக்குகிறார்.
(468)
70.ஈற்றில் இடையின ஒற்றுஉறும் வண்ணச்
 சொல்லொடு வேறுஇனத்து ஒன்று புணர்ந்தும்அவ்
 வண்ணம் தோன்றும்; வாராது ஒழியினும்
 குத்தற் குற்றம்என்று உரைப்பது குணமே,
ய,ர,ல,வ,ழ,ள என்னும் இடையின மெய்யால் முடியும் சந்தச் சொற்களுடன் இடையினமல்லாத வேறு இனத்து எழுத்தால் தொடங்கும் ஒரு சொல் சந்தியில் சேர்ந்தாலும் தய்யச் சந்தம் தோன்றும், ஒருவேளை விட்டிசைத்தலால் அவ்வோசை தெளிவாகப் புலப்படாமலிருந்தாலும் கூட இத்தகைய சந்தப் புணர்ச்சிகளைக் குத்தற் குற்றம் உடையனவாகக் கொள்ளுதலே முறை என்றவாறு,
தய்யச் சந்தம் இடையின மெய்யின் ஒலிஆதிக் கத்தால் தோன்றும் வண்ணம் ஆதலின் “அவ்வண்ணம்” என அது கூறப்பட்டது. வேறு இனத்து எனப் பொதுப்படக் கூறினாலும் இடையின மெய்யோடு கூடித் தய்யச் சந்தமாகும் வேறுஇனம் வல்லினமே ஆகலின் அதனையே சிறப்பாகக் கொள்க. இது பற்றியே வண்ணத்தியல்பிலும், “மூவினத் தெழுத்தினும் முழுமையைக் குறிக்கும் சந்திகள் தோறும் தணவுவ தனந்து சேர்ப்பவை சேர்ப்பது சிறந்தோர் வழக்கே”1 எனப்பட்டது.
அம்பெய் தவனெவன்; உயிர்உய் மாறுபுரி என்னும் இரு தொடர்களை ஆராய்வோம், அம்பெய்-தந்த. தவனெவன்-தனதன, தந்த தனதன என்று அம்பெய்தவனெவன் எனச் சேர்த்தால் யகரமெய் வல்லினத்தோடு சேர்ந்து ஒலிபெற்று விடுகிறது. அம்பெய் + தவன் என்ற சந்தியில் பெய்த என்ற